Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதலமைச்சரையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்!?

முதலமைச்சரையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ்!?

நேற்று சென்னையில் முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின்அவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால் மு க ஸ்டாலின் அவர்கள் கொரோனா பாதிப்பு காரணமாக தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். மு.க ஸ்டாலின் கூறுகையில் தனது டுவிட்டரில் நான் தனிமையில் உள்ளேன் என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து மு.க ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் தெரிவிப்பதாவது, எனக்கு ஒரு நாள் முழுவதும்  உடற்சோர்வு சற்று அதிகமாக இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் 19 உறுதிசெய்யப்பட்டது. பரிசோதித்த மருத்துவர்கள் தனக்கு கொரோனா தொற்று உறுதியானதை தெரிவித்தார்கள். தொற்று காரணமாக தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் என்றார். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால், அடுத்த 2 நாட்களுக்கு அவர் எந்த நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார். அனைத்து நிகழ்ச்சிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே 3 தவணை கொரோனா தடுப்பூசிகளையும் போடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவரது உடலில் கொரோனா பாதிப்பின் அளவும் சற்று குறைவாகவே இருப்பதாக மருத்துவர்கள் சொல்கின்றார்கள்.

Exit mobile version