புதிய அவதாரத்தில் மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்… மீண்டும் மீண்டுமா முடியலப்பா!!

0
112

 

புதிய அவதாரத்தில் மீண்டும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ்… மீண்டும் மீண்டுமா முடியலப்பா…

 

மீண்டும் புதிய அவதாரத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியதுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதாவது தற்பொழுது கிடைத்துள்ள தகவலின் படி கொரோனா வைரஸின் மாறுபாடான ஈ.ஜி 5.1 என்று அழைக்கப்படும் ‘எரிஸ்’ என்ற கொரோனா வைரஸ் இங்கிலாந்து, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

 

அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடான எரிஸ் வைரஸின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும் வேகமாக பரவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

 

தற்பொழுது இந்தியா நாட்டில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸின் பரவல் சற்று சிறிதளவு அதிகரித்து உள்ளது. அதிலும் ஒரு நபருக்கு இந்த புதிய மாறுபாடான எரிஸ் வைரஸின் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

 

இந்த புதிய மாறுபாடு அடைந்த எரிஸ் வைரஸானது ஒமிக்ரான் வைரஸின் துணை மாறுபாடு ஆகும். இந்த எரிஸ் வைரஸ் முதன் முதலில் மே மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர் ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் எரிஸ் வைரஸின் தாக்கம் இல்லாத நிலையில் தற்பொழுது எரிஸ் வரைஸ் மிக வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.

 

மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஜூலை மாதம் இறுதியில் 70தாக இருந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் 6ம் தேதியின் நிலவரப்படி 115 ஆக அதிகரித்துள்ளது.

 

தற்பொழுது இங்கிலாந்து நாட்டில் எரிஸ் வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகின்றது. இந்த எரிஸ் வைரஸ் தொற்று இங்கிலாந்து நாட்டில் அதிக மக்களை பாதித்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.

 

எரிஸ் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, தொண்டை வலி, காய்ச்சல், மார்பு இறுக்கம் போன்ற அறிகுறிகள் இருக்கும். அதுமட்டுமில்லாமல் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கு இந்த எரிஸ் வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

 

இந்த எரிஸ் வைரஸ் தொற்றை பார்த்து பயப்பட தேவையில்லை என்றாலும் இதை உன்னிப்பாக காவனிக்க வேண்டியது அவசியமாக இருக்கின்றது. கொரோனா நோய் தொற்று நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் நம்மை பாதிக்கின்றது. அல்லது நோய்த் தெற்றுகள் காரணமாகவும் தடுப்பூசிகள் காரணமாகவும் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் கூட கொரோனா வைரஸ் தொற்று நம்மை பாதிக்கும். இதிலினுந்து பாதுகாத்துக் கொள்ள நாம் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது அவசியமாகும்.