பணத்தை தூக்கி போடுங்க பண்ட மாற்று முறைக்கு வாங்க : கலாய்க்கும் நெட்டிசன்கள்

0
119

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவி ஆட்டிப்படைத்து வருகிறது. கொரோனா தொற்று இந்தியாவிலும் பரவிவருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இதுவரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக 38 நபர்களுக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது. மேற்கொண்டு பரவாமல் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

அரசு கொரோனா வைரஸைப் பற்றி விழிப்புணர்வு நடவடிக்கைகள் செய்து வந்தாலும் மக்கள் பீதியிலேயே உறைந்துள்ளனர். இதற்கு காரணம் அன்றாடம் சமூகவலைதளங்களில் பரவும் வதந்திகள் தான் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த நிலையில் ரூபாய் நோட்டுகளால் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என்று மக்களிடையே கருத்து பரவி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்துவருகிறது.

இதை பார்த்த நெட்டிசன்கள் ‘பணத்தை எல்லாம் தூக்கிப் போடுங்கள் இதற்கு பதில் பண்டம் மாற்று முறையிலேயே வணிகம் செய்யலாம் வாங்க’ என்று கருத்து கூறி வருகின்றனர்.