Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் கொரோனாவின் ருத்ர தாண்டவம் ஆரம்பம்! அமல்படுத்தப்படும் ஊரடங்கு !

Lockdown from today! The next warning bell issued by the Government of Tamil Nadu!

Lockdown from today! The next warning bell issued by the Government of Tamil Nadu!

மீண்டும் கொரோனாவின் ருத்ர தாண்டவம் ஆரம்பம்! அமல்படுத்தப்படும் ஊரடங்கு !

ஓராண்டு காலமாக மக்கள் கொரோனாவால் பெருமளவு பாதிப்படைந்தனர். இந்நிலையில் பொது மக்களுக்கான வேலைகள் மற்றும் பண பரிவர்த்தனைகள் முற்றிலும் குறைந்து காணப்பட்டது.அதைத்தொடர்ந்து பல உயிர்களையும் இழக்க நேரிட்டது.இதனையடுத்து கொரோனாவின் தாக்கம் சிறிதளவு குறைந்த நிலையில் மக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.அவ்வாறு அனுமதித்ததும் மக்கள் சிறிது மாதத்திலேயே கொரோனா என ஒன்று இருந்ததை மறந்து சகஜமாக நடமாட ஆரம்பித்து விட்டனர்.

இதனையடுத்து கொரோனாவனது பல மடங்கு அதிக வேகத்தில் பரவ ஆரம்பித்து விட்டது.இந்நிலையில் மகராஷ்டிராவில் கொரோனாவின் தாக்கம் அதிக அளவு உள்ளதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதே போல் தமிழ்நாடு மற்றும் கேரளா என எட்டு மாநிலங்களில் கொரோனாவின் தாக்கம் அதிகமா உள்ளது.இதுகுறித்து இன்று நரேந்திர மோடி வானொலி மூலம் அனைத்து மாநிலங்கள் முதலமைச்சர்களுடனும் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார்.இதில் ஊரடங்கு அமல்படுத்த அதிக வாய்புகள் உள்ளது என எதிர்பார்க்கபடுகிறது.

அதே போல் இன்று வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.59 லட்சத்தை தாண்டியுள்ளது.இன்று காலை எட்டு மணி வரை 24  நேரம் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி புதிதாக பாதித்தவர்களின் எண்ணிக்கை 28,903 ஆக உள்ளது.ஆகையால் மொத்த பாதிப்பின் எண்ணிக்கையாக 1,14,38,734 ஆக உயர்ந்துள்ளது.புதியதாக இறந்தவர்களின் எண்ணிக்கை 188ஆக உள்ளது.தொற்றிலிருந்து ஒரே நாளில் மட்டும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 17,741 ஆக உள்ளது.மொத்த எண்ணிக்கை 1,10,45,284 ஆக உள்ளது.

இதுவரை இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து மருத்துவமையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,43,406 ஆக உள்ளது.குணமடைந்தோர் விகிதம் 96.56% ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1.39 சதவீதமாக குறைந்துள்ளது.அதுமட்டுமின்றி இந்தியாவில் மட்டும் ஏறத்தாள 3,50,64,536 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Exit mobile version