Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜனவரியில் கொரோனா மூன்றாவது அலை: தமிழக சுகாதார துறை

Coronavirus 3rd wave starts in January

கொரோனா மூன்றாவது அலை ஜனவரியில் தொடங்கலாம் என தமிழக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கின்றனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா முதல் அலை தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டது. ஆனால் ஊரடங்கிற்கு பிறகும் அதிகமான கொரோனா பாசிட்டிவ் கேசுகளும் இறப்பு ண்ணிக்கையும் கூடி கொண்டே போனது. இது ஒரு புறம் இருக்க கொரோனா தடுப்பூசி உருவாக்கும் பணிகளும் ஆயத்தப்படுத்தப்பட்டன.

பிறகு ஆகஸ்ட் மாத்த்தில் இருந்து கொரோனா பரவல் குறைய தொடங்க, மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் போதே கொரோனா இரண்டாவது அலை தொடங்கியது. மீண்டும் கடந்த மார்ச் மாதம் ஓரளவுக்கு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்த பட்டதால் இம்முறை கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் வரும் ஜனவரி மாதத்தில் மூன்றாவது அலை ஆரம்பிக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் மக்கள் இதற்கு அச்சப்பட வேண்டாம் எனவும், இதற்கான முன்னச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது, தடுப்பூசி முகாம்களும் அதி விரைவில் செயல்பட்டு வருகின்றன எனக் கூறப்படுகிறது.

 

 

 

 

 

 

 

 

Exit mobile version