Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உலக அளவில் நோய் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 26. 51 கோடியை கடந்தது!

சீனா நாட்டில் வீடியோ ஆன நோய் தொற்று பரவல் உலகை தற்போது உலுக்கி வருகிறது. இந்த வைரஸ் தொற்று பரவ ஏறத்தாழ ஒரு வருடத்தை கடந்தும் இதன் வீரியம் சற்றும் குறைந்தபாடில்லை.

உலகம் முழுவதும் நோய் தொற்று பரவல் காரணமாக பாதிப்படைந்த நபர்களின் எண்ணிக்கை 26.51 கோடியை கடந்து இருக்கிறது. இந்த வைரஸ் தொற்று தாக்குதலுக்கு பலியானோரின் எண்ணிக்கை 52. 57 லட்சத்தை கடந்து இருக்கிறது.

அத்துடன் இந்த நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்தவரின் எண்ணிக்கை 23.88 கோடியை கடந்து உள்ளது. அடிக்கடி நோய்தொற்று பரவியவர்களில் 2.5 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 26 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கின்ற நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் முதல் ஐந்து இடங்களில் இருக்கின்றன.

Exit mobile version