Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்தியாவில் அதிகரிக்கும் நோய்த்தொற்று!

நாட்டில் நோய்த்தொற்று பரவலின் இரண்டாவது அலை படிப்படியாக குறைந்து வந்த சூழலில் சென்ற சில தினங்களாக ஒரு சில மாநிலங்களில் மீண்டும் இந்த நோய்த்தொற்று வேகமெடுக்க தொடங்கியிருக்கிறது. தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா மற்றும் ஒரு சிலர் வடகிழக்கு மாநிலங்களில் ஒரு சுற்று அதிகரித்தது இதன் காரணமாக, 11 வாரங்களாக தொடர்ச்சியாக குறைந்து வந்த ஒரு வார பாதிப்பு இந்த மாதத்தின் முதல் வாரத்தில் அதிகரித்து இருக்கிறது.

ஜூலை மாதம் 26 முதல் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி வரையிலான வாரத்தில் மட்டும் 2.86 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இது அதற்கு முந்தைய மாதத்தை விட 7.5 சதவீத அளவு அதிகமாக இருக்கிறது. முறை தொடர்பாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியது தொடர்ந்து பல மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. இதன் பலனாக தற்சமயம் ஒருவார பாதிப்பு 4 சதவீதமாக குறைந்திருக்கிறது.

சென்ற இரண்டாம் தேதியில் இருந்து எட்டாம் தேதி வரையிலான ஒரு வாரத்தில் 2.74 லட்சம் நபர்களுக்கு நோய் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது இதன் மூலமாக ஒரு வாரகால பாதிப்பு 4.2 சதவீதம் வரையில் குறைந்து இருக்கிறது என ஒரு புள்ளிவிவரம் தெரிய வந்திருக்கிறது இதற்கிடையில் இன்று காலை எட்டு மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 35 ஆயிரத்து 499 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

இதன் காரணமாக, ஒட்டு மொத்த மதிப்பு 3 கோடியே 19 லட்சத்து 69 ஆயிரத்து 954 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்றையதினம் அதிகபட்சமாக கேரள மாநிலத்தில் 18507 பேருக்கும், மகாராஷ்டிரா மாநிலத்தில் 5508 பேருக்கும், ஆந்திர மாநிலத்தில் 2050 பேருக்கும், தமிழகத்தில் 1956 பேருக்கும், கர்நாடக மாநிலத்தில் 1509 பேருக்கும், ஒடிசா மாநிலத்தில் 1243 பேருக்கும், இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

நோய்தொற்று பாதிப்பால் மகாராஷ்டிர மாநிலத்தில் 151 பேர் இறந்திருக்கிறார்கள். கேரளாவில் 93 பேரும், ஒடிசாவில் 69 பேரும், உள்பட நேற்று 447 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இதன் காரணமாக, மொத்த பலி எண்ணிக்கை 4 லட்சத்து 28 ஆயிரத்து 350 ஆக அதிகரித்திருக்கிறது. மகாராஷ்டிரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 996 ஆக இருக்கிறது. கர்நாடகாவில் 36 ஆயிரத்து 791 ஆகவும் தமிழ்நாட்டில் 34 ஆயிரத்து 317 என்றும் இருக்கிறது.

நேற்றைய தினம் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அந்தரத்தில் நேற்று ஒரே நாளில் 39 ஆயிரத்து 686 பேர் இந்த நோய் தொற்றிலிருந்து முழுமையாக குணம் பெற்று வீடு திரும்பி இருக்கிறார்கள். இதுவரையில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை மூன்று கோடியே 11 லட்சத்து 39 ஆயிரத்து 457 ஆக அதிகரித்திருக்கிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 2 ஆயிரத்து 288 ஆக குறைந்திருக்கிறது. இது நேற்று முன்தினம் விட 4 ஆயிரத்து 634 பேர் குறைவு என சொல்லப்படுகிறது.

நாடு முழுவதும் இன்று காலை 7 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 16 லட்சத்து 11 ஆயிரத்து 590 தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட இருக்கிறது. இது வரையில் மொத்தம் 5 கோடியே 86 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்டிருக்கிறது.இதற்கிடையில் விடுமுறை நாளான நேற்றைய தினம் நாடு முழுவதும் பதிமூன்று லட்சத்து 71 ஆயிரத்து 871 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக, ஒட்டுமொத்த பரிசோதனை எண்ணிக்கை 48.17 கோடி ஆக அதிகரித்திருக்கிறது.

Exit mobile version