நோய் தொற்றிலிருந்து மெல்ல மீண்டெழும் உலகம்!

0
150

கடந்த 2019 ஆம் வருடம் சீனாவில் தோன்றிய நோய்த்தொற்று பரவல் பின்பு மெல்ல, மெல்ல, உலக நாடுகளுக்கு பரவத்தொடங்கியது. சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய இந்த நோய்தொற்றால் உலக நாடுகள் அனைத்தும் பலவிதமான சிக்கல்களை சந்தித்து வந்தனர்.

மேலும் இந்த நோய் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக முயற்சித்து வந்தன. அதோடு இந்த நோய் தொற்றுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியிலும் உலக நாடுகள் தீவிரமாக இறங்கினார்.

இதற்கிடையே இந்த நோய் தொற்று நோய் பரவலுக்கு காரணமாக, இருந்த சீனாவின் மீது உலக நாடுகள் அனைத்தும் கடும் கோபம் கொண்டனர். ஆகவே இந்த நோய்த்தொற்று பரவலை பரப்பியதற்கு சீனா பதில் சொல்லியே தீர வேண்டும் என்று உலக நாடுகள் அனைத்தும் ஐநா சபையில் முறையிட்டனர்.

அதோடு ஐநா சபையில் சீனாவிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருவதற்கும் உலகநாடுகள் தயாராகி வந்தனர்.

இப்படியான நிலையில், உலகம் முழுவதும் நோய்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53,26,12,686 என அதிகரித்திருக்கிறது. வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 2,27,96,317 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இருந்தாலும் நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து இதுவரையில் 50,35,2,867 பேர் குணமடைந்திருக்கிறார்கள். ஆனால் நோய் பரவல் காரணமாக, உலகம் முழுவதும் இதுவரையில் 63,13,502 பேர் பலியாகியிருக்கிறார்கள்.