உலக அளவில் நோய்தொற்று பாதிப்பின் எண்ணிக்கை 24.18 கோடியாக அதிகரிப்பு!

0
205

கடந்த 2019ஆம் ஆண்டு சீன நாட்டின் வூகான் நகரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் அந்த நோய் தொற்று பரவ தொடங்கியது, முதலில் சீனாவை மட்டும் இந்த நோய்த்தொற்று பாதித்துக் கொண்டு இருந்தது.

ஆனால் அதன் பிறகு சீன நாட்டில் இருந்து மக்கள் அனைவரும் வெளியேறவே அங்கிருந்து பல நாடுகளுக்கு சென்ற பொது மக்களால் உலகம் முழுவதும் இந்த நோய்த்தொற்று பரவத்தொடங்கியது. இந்தியாவிற்கு முதன் முதலில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஊடுருவியது இந்த நோய்த்தொற்று ஆனால் இந்த நோய் தொற்றினால் அதிகமாக பாதிக்கப்பட்டது அமெரிக்கா தான்.

உலக வல்லரசு நாடாக இருக்கக்கூடிய அமெரிக்காவின் பொருளாதார ரீதியாக பாதிப்படைய வேண்டும் என்பதற்காக சீனா எடுத்த தந்திர நடவடிக்கை இது என்று சொல்லப்படுகிறது.இதனால் சீனா மீது உலக நாடுகள் பலவும் பயங்கர கோபத்தில் இருக்கின்றன.

இந்த சூழ்நிலையில், உலகம் முழுவதும் நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 24 கோடியே 18 லட்சத்து 34 ஆயிரத்து 242 ஆக அதிகரித்து இருக்கிறது. நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரு கோடியே 78 லட்சத்து 12 ஆயிரத்து 855 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நோய்தொற்று பாதிப்பில் இருந்து இதுவரையில் இருபத்தி ஒரு கோடியே 97 லட்சத்து 2 ஆயிரத்து 92 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். இருந்தாலும் நோய்த்தொற்று பரவல் காரணமாக உலகம் முழுவதும் இதுவரையில் நாற்பத்தி ஒன்பது லட்சத்து 19 ஆயிரத்து 795 பேர் பலியாகி இருக்கிறார்கள்.