ஆகஸ்ட் மாத இறுதியில் மூன்றாவது அலை!! இந்த காரணங்களால் மட்டுமே ஏற்படும்!!

0
167

நாடு முழுவதும் கொரோனா தொற்றானது இரண்டு வருடமாக மிகவும் பாதித்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் மூன்றாவது அலை ஏற்படலாம் என்று ஐசிஎம்ஆர் தொற்று நோய் பிரிவு தலைவர் டாக்டர் சமரன் பாண்டா எச்சரித்து உள்ளார்.

ஆனால் அது இரண்டாம் வகை அளவிற்கு மோசமாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இரண்டாவது அலையின் தாக்கம் மிக மோசமாக இருந்தது. மேலும், நாட்டில் உள்ள அனைத்து மருத்துவ மனைகளும் கொரோனா நோயாளிகளின் காரணமாக நிரம்ப தொடங்கின.

இதன் காரணமாக கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவிக் கொண்டிருந்தது. ஆனால், தற்போதுதான் வைரஸ் பாதிப்பானது மெல்ல மெல்ல குறைந்து கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு 50 ஆயிரத்திற்கும் கீழ் ஆக குறைந்துள்ளது.

இருந்தாலும், இரண்டாம் அலை இன்னும் முழுதாக முடியவில்லை என்றும், மாநிலங்கள் தளர்வுகள் அறிவிக்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், கொரோனா மூன்றாம் வகை தொடர்பான தகவல்கள் இணையதளத்தில் அதிகம் வெளிவரத் தொடங்கிவிட்டன.

இதன் காரணமாக மக்கள் கொரோனா வழிகாட்டுதல்களை முறையாக கடைபிடிக்கவில்லை என்றால் விரைவில் மூன்றாம் நிலை ஏற்படும் என்று ஆய்வாளர்கள் மற்றும் நிபுணர்கள் எச்சரித்து உள்ளனர்.

இந்த நிலையில், நோய்த்தொற்று பிரிவு தலைவர் டாக்டர் சமரன் பாண்டா கூறுவது, இந்தியாவில் வரும் ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாவது அலை ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும், மூன்றாவது அலை நாடு முழுவதும் ஏற்படலாம்.

ஆனால், அதே நேரம் இது இரண்டாம் அலை அளவுக்கு மோசமாக இருக்காது. மேலும், கொரோனா நோயிலிருந்து குணமடைந்தவர்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது மிகவும் குறைவாக இருக்கும். 3 காரணங்களால் கொரோனா மூன்றாம் அலை தொன்றலாம்.

கொரோனா காலப்போக்கில் குறைந்து இதன் காரணமாக மூன்றாம் நிலை தோன்றலாம் அல்லது புதிய வகை தோன்றி நோய் எதிர்ப்பு சக்தி பலனளிக்காமல் இறந்து போகலாம். வேகமாக பரவும் ஒரு உருமாறிய கொரோனாவாக தோன்றலாம்.

தளர்வு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விரைவாக நீக்குவதன் மூலமாக மூன்றாவது அலை வேகமாக ஏற்படலாம். இந்தியாவில் இந்த மூன்றும்தான் கொரோனா ஏற்பட முக்கியமான காரணங்களாகும்.

டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் ஏற்கனவே நாட்டில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி விட்டன. மேலும் அவை மோசமான பாதிப்பை இதற்குமேல் ஏற்படுத்த முடியாது என்று நான் கருதுகிறேன்’ என அவர் தெரிவித்தார். இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா தற்போது பல நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 111 நாடுகளில் இது கண்டறியப்பட்டுள்ளது.