இந்தியாவிலேயே அதிகபட்சமாக 987 கோடி ரூபாய் தமிழகத்திற்கு கொரோனோ தடுப்பு நிதி நிர்மலா சீதாராமன் தகவல்
கொரோனோ பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கவும் போதிய மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு நிதி அளிக்க வேண்டும் என பல்வேறு மாநிலத்தின் முதல்வர்களும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
இது குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தனது டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளதாவது 14 வது நிதிக்குழுவின் அடிப்படையில் மாநில அரசுகளின் உள்ளாட்சி துறைகளுக்கு 2570 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதில் நகரப்பகுதிகளுக்கு 1629 கோடி ரூபாயும் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கு 940 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி பகுதிகளில் மக்களிடையே தூய்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊய்மையை நிலைநாட்டவும் கேட்டுக்கொர்டுள்ளார்.
கொரோனோ வைரஸ் தடுப்பு நிதியாக தமிழகத்திற்கு இந்தியாவிலேயே அதிகபட்சமாக 987 கோடி ரூபாய் ஒதுக்கப் பட்டுள்ளதாகவும் தமிழகத்திற்கு அடுத்தபடியாக ஆந்திராவிற்கு 870 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பாரதப்பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கொரோனோ தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என கூறிய நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்திற்கு அதிகபட்ச நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.