மாநகராட்சியானது தாம்பரம்! நிறைவேற்றப்பட்ட அவசர சட்டம்!

0
186

சட்டப்பேரவையில் நகராட்சி நிர்வாக மானியக் கோரிக்கையின் போது அமைச்சர் கே என் நேரு தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் அதனை சுற்றி இருக்கக் கூடிய பேரூராட்சிகள் ஊராட்சிகள் போன்றவற்றை  ஒன்றிணைத்து மாநகராட்சி ஏற்படுத்தப்படும் என அறிவித்திருந்தார்.

அந்த அறிவிப்பின் அடிப்படையில் புதிய மாநகராட்சிகள் தொடர்பான அரசாணை தமிழக அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன் அடிப்படையில் புதிய மாநகராட்சியில் தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், அனகாபுத்தூர் உள்ளிட்ட நகராட்சிகள் மற்றும் சிட்லபாக்கம், மாடம்பாக்கம், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, திருநீர்மலை பேரூராட்சி, களை இனைக்கவும், கூடுதலாக 15 கிராம ஊராட்சிகளிலும் ஒன்றிணைத்து அரசிதழில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

அந்த வகையில், தாம்பரம் நகராட்சியில் சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளுக்கும், அடிப்படை வசதிகளான குடிநீர் பாதாள சாக்கடை, உள்ளிட்டவற்றை விரிவுபடுத்தப்படும் என பெருநகர சென்னை மாநகராட்சியுடன் அதனை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளும் இணைந்து இருக்கின்ற காரணத்தால், வளர்ச்சிப்பணிகள் முன்னெடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இப்படியான சூழ்நிலையில், தற்சமயம் தமிழ்நாட்டின் 20-வது மாநகராட்சியாக தரம் தரம் உயர்த்தப்பட்டதற்கான அறிவிப்பை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டது 10 நகர்ப்புற உள்ளாட்சி, அமைப்புகள் தாம்பரம் உள்ளிட்ட 5 நகராட்சிகள், மற்றும் 5 பேரூராட்சிகள், ஒன்றிணைத்து தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.