Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஒருவர்கூட வேட்பு மனு தாக்கல் செய்யாத மாநகராட்சி வார்டு! அதிர்ச்சியில் தேர்தல் அலுவலர்கள்!

சமீபத்தில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.அதன்படி தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதற்கான தேதியையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்கான தேதியையும், வெளியிட்டது அதோடு வேட்புமனு தாக்கல் தொடர்பான தேதியையும், வேட்புமனு தாக்கல் முடிவுறும் தேதியையும், அறிவித்தது.

அதன்படி இன்றுடன் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிவடைகிறது.இதனால் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பாக வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது, நேற்றையதினம் மனுத்தாக்கல் செய்வது விறுவிறுப்பாக இருந்த நிலையில் இன்றும் மனுத்தாக்கல் பரபரப்பாக செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிகநேரம் 60வது வார்டில் ஒருவர் கூட மனுதாக்கல் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது.

திருப்பூர் மாநகராட்சியில் இருக்கின்ற 60 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு சென்ற 28ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் ஆரம்பமானது. மாநகராட்சி 4 மண்டலங்களில் 8 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு வேட்புமனுக்கள் பெற்று வருகிறார்கள். சென்ற 28ம் தேதி முதல் 4 மண்டலங்களிலும் வேட்புமனு படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

நேற்று வரையில் சற்றேறக்குறைய 900 பேர் வேட்புமனு படிவம் பெற்று சென்றார்கள், மனுத்தாக்கல் ஆரம்பித்த நாள் முதல் 2 நாட்களும் ஒருவர்கூட மனுதாக்கல் செய்யவில்லை என்று சொல்லப்படுகிறது. கடந்த 31ஆம் தேதி முதன்முதலாக 32வது வார்டில் சுயேட்சை வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். அதன்பிறகு பிப்ரவரி 1ம் தேதி பாஜகவின் வேட்பாளர் மற்றும் 6 சுயேச்சைகள் என்று 7 மனுக்கள் பெறப்பட்டன.

இதனைத் தொடர்ந்து 2ம் தேதி 72 மனுக்கள் பெறப்பட்டது, திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் வேட்பாளர் பட்டியல் வெளியானதை தொடர்ந்து மனுத்தாக்கல் சூடுபிடிக்கத் தொடங்கியது. பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தனித்துப் போட்டி என்ற சூழ்நிலையில், அந்த கட்சிகள் சார்பாக பல வார்டுகளில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகிறார்கள்.

அந்த விதத்தில் நேற்று ஒரே நாளில் 222 பேர் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில் நேற்று வரையில் ஒட்டுமொத்தமாக 306 மனுக்கள் பெறப்பட்டு இருக்கின்றன. அதில் அதிகபட்சமாக 42 வது வார்டில் போட்டியிட 13 வழங்கப்பட்டிருக்கிறது.

ஆனாலும் 60வது வார்டில் மட்டும் இதுவரையில் ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை. அதோடு 32 மற்றும் 26 உள்ளிட்ட இடங்களில் தலா 12 மனுக்கள் பெறப்பட்டன. இன்று மாலை 5 மணியுடன் மனு தாக்கல் நிறைவு பெற இருக்கிறது.

இன்று மீதமிருக்கின்ற கூட்டணி கட்சிகள் மற்றும் கவுன்சிலர் கனவில் இருக்கின்ற சுயேட்சைகள் முக்கிய கட்சிகளில் வாய்ப்பு கிடைக்காத நபர்கள் என்று அதிகளவில் மனுத்தாக்கல் வழங்க வாய்ப்பிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து எல்லாத் தேர்தல் அலுவலகங்களிலும் இதை சமாளிக்கும் விதத்தில் டோக்கன் வழங்குதல், கூடுதல் பாதுகாப்பு போன்ற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

நாளை இந்த மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது, உரிய விதத்தில் பூர்த்தி செய்யாத மற்றும் ஆவணங்கள் இணைக்கப்படாத மனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். வரும் 7ஆம் தேதி மனுக்கள் வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் என்று சொல்லப்படுகிறது.

அதன்பிறகு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும், கவுன்சிலர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒருசிலர் தெரிவிக்கும்போது கவுன்சிலராக வெற்றி பெறுவோம் என்ற முழுமையான நம்பிக்கையுடன் தான் களமிறங்கியிருக்கிறோம். ஆனாலும் வெற்றி பெறுவோமா? என்பதை பொதுமக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்தார்கள் என கூறப்பட்டிருக்கிறது.

Exit mobile version