Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மண்ணெண்ணெய் கேனுடன் நகராட்சி கூட்டத்திற்கு வந்த பெண் கவுன்சிலர்கள்.. தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டதால் பரபரப்பு..!

நகராட்சி கூட்டத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்ட இரண்டு பெண் கவுன்சிலர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாதபுரம் நகராட்சி சார்பாக கூட்டம் நடைபெற்றது. இதில்,கவுன்சிலர்கள், வார்டு உறுப்பினர்கள் நகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.கூட்டத்தில், நகராட்சி தொடர்பான விவாதம் நடைபெற்றது. அப்போது சாலை பணிகள் குறித்த விவாதம் நடைபெற்றது.

சாலை பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான டெண்டர் விரைவில் கோரப்படும் எனவும் நகரமன்ற தலைவர் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த மும்தாஜ், சபீனா இரண்டு பெண் கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். அதன்பின்னர், அவர்கள் கொண்டு வந்திருந்த கேனில் இருந்து மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நகரமன்ற தலைவர் அவர்களை தடுக்க சென்ற போது அவரையும் மண்ணெண்ணெய் ஊற்றி கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதனை அடுத்து, தகவலறிந்து வந்த காவல்துறையினர் இருவரையும் மீட்டு அவர்கள் மீது வழக்குபதிவு செய்தனர்.நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் செய்த இந்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version