“இது கூட நல்லா இருக்கே” கொரோனா நோயாளிகளுக்கு கவுன்சிலிங்!

0
175

கொரோனா சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அங்குள்ள சூழலைக் கண்டு பதட்டமும் பயமும் கொண்டு மேலும் தீவிர நிலைமைக்கு சென்று விடுகின்றனர்.

இங்குள்ள சூழலைக் கொண்ட பயப்படாதவாறு அவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அங்குள்ள பாதிக்கப்பட்ட நோயாளிகளை பார்க்கும் பொழுது மிகுந்த பயமும் பதட்டமும் அடைந்து மேலும் நோய் அவர்களுக்கு தீவிரமாகிறது. மேலும் உடன் வந்தவர்களுக்கும் மன நிலை பாதிக்கிறது. இந்த சூழலை தடுக்கும் வகையில் கொரோனோ நோயாளிகளுக்கு கவுன்சிலிங் தர வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

 

கொரோனா என்பது ஒன்றுமில்லை. மற்ற நோயை போல இதுவும் ஒரு நோய் தொற்று. இதனிடம் இருந்து நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இதனால் நீங்கள் எந்த ஒரு பதற்றமடைய வேண்டாம். பயம் தான் நமக்கு முதல் எதிரி என்ற எண்ணங்களை அவர்களுக்குள் விதைத்தால் அவர்கள் தைரியமாக இருப்பார்கள். மதுரை சமூக ஆர்வலர் மற்றும் வழக்கறிஞர் முத்துக்குமார் கூறியுள்ளார்.

 

பொதுவாக கொரோனா பாதித்தவர்களுக்கு மூச்சுத்திணறல் இருந்தால் தான் ஆக்சிசன் படுக்கைகள் தேவைப்படுகின்றன. ஆனால் கொரோனா என்று வந்துவிட்டால் ஆக்சிஜன் படுக்கைகள் தான் வேண்டும் என்று சண்டையிடுவார் பலர் உள்ளனர். ஒருவரைப் பார்த்து மற்றவர்களும் அதே போல் நடந்து கொள்கின்றனர்.இந்த சூழ்நிலையில் நோயாளிகளை பரிசோதித்து என்ன மாதிரியான நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அவர்களுக்கு கவுன்சிலிங் செய்து ஆக்சிஜன் தேவையா? இல்லையா? என்று புரிய வைக்கும் மனநிலையை அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும் என்றார், நம்பிக்கை தான் மருந்து எஸ்.யோகலட்சுமி, மனநல ஆலோசகர்.

 

இந்த கொரொனா சூழலில் இருமல், சளி, காய்ச்சல் இருந்தால் மட்டும் மருத்துவரை அணுகவேண்டும். இல்லை ஸ்கேன் மூலம் ஏதாவது தெரியவந்தால் பதட்டம் அடையாமல் அதற்கு தடுப்பூசி போட்டிருந்தால் எந்த ஒரு பயமும் இல்லை. குறிப்பிட்ட காலத்திற்குள் குணமாகிவிடும்.. நீங்கள் அன்றாட வேலைகளை கவனிக்கலாம் .அதேபோல் நோயாளிகளின் கூட இருந்தவர்களுக்கும் சிகிச்சை தேவைப்படும். நீங்கள் அன்றாட வேலைகளை செய்யலாம்..அலைபேசியில் மற்றவர்களை அழைத்து பேசிக் கொள்ளலாம். மற்றவர்களோடு உடல்நிலையை தங்கள் உடல்

நிலையோடு ஒப்பிட்டு பயப்படக் கூடாது என்று கூறியுள்ளனர்.