கவுண்டவுன் ஸ்டார்ட் சந்திராயன் 3!!நிலவில் நிலநடுக்கம் ஏற்படுமா-தமிழரின் சாதனை!!

0
120

கவுண்டவுன் ஸ்டார்ட் சந்திராயன் 3!!நிலவில் நிலநடுக்கம் ஏற்படுமா-தமிழரின் சாதனை!!

உலகமே உற்று நோக்கம் சந்திராயன் விண்கலம் LVM3 ராக்கெட் மூலம் இன்று ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பிற்பகல் 2:30 மணிக்கு ஏவப்படுகிறது.

LVM 3- 43.5 மீட்டர் உயரம் மற்றும் சந்திராயன்3 விண்கலத்தின் எடை சுமார் 3865 கிலோ கொண்டுள்ளது.

இதில் சுமார் 7 வகையான ஆய்வு கருவிகளும் வைத்து செயற்கைக்கோள் தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ராக்கெடில் திட மற்றும் திரவ என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் குளிரூட்டப்பட்ட கிரயோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது இது ராக்கெட்டில் எந்தவித கோளாறு ஆகாமல் இருப்பதற்காக பொருத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்கான கவுண்டன் சுமார் 25 மணி நேரம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-3 விண்கலம் சுமார் ரூபாய் 615 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பான மற்றும் மென்மையான தரையிறக்கத்தை நிரூபிக்க சந்திரனில் ரோவர் சுற்றுவதை நிரூபிக்க மற்றும் இடத்திலேயே அறிவியல் சோதனைகளை நடத்துதல் போன்ற பணி நோக்கங்களை அடைய, லேண்டரில் பல மேம்பட்ட தொழில்நுட்பங்கள் ஆராயப்பட உள்ளன. நிலவில் நிலநடுக்கம் போன்றவை ஏற்படுமா போன்ற பல்வேறு நிகழ்வுகளை ஆராய்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு: இந்திய ஆய்வு மையத்தால் நிலவை ஆராய்வதற்காக தொடங்கப்பட்ட சந்திராயன் திட்டத்தின் இயக்குனர்களாக தமிழர்களே பொறுப்பு வகிப்பதுதமிழர்களுக்கு மிகப்பெரிய பெருமையாகும்.

சந்திராயன்1- மயில்சாமி அண்ணாதுரை, சந்திராயன்2-முத்தையா வனிதா, சந்திராயன்3-வீரமுத்துவேல்.

பெருமைக்குரிய தமிழர்களின் திட்ட இயக்கத்தால் இயக்கப்படும் சந்திராயன் 3 ஆய்வு வெற்றி பெற்றால் நிலவின் பல்வேறு ரகசியங்கள் உலகத்திற்கு தெரிய வரும். நம் நாட்டுக்கும் தமிழர்களுக்கும் பெருமையை பெற்று தரும்.