Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கள்ளக்குறிச்சி வழக்கு எதிரொலி! ஆசிரியர்களுக்கு பரந்த புதிய ரூல்ஸ்!

Counterfeit case reverberates! Broad new rules for teachers!

Counterfeit case reverberates! Broad new rules for teachers!

கள்ளக்குறிச்சி வழக்கு எதிரொலி! ஆசிரியர்களுக்கு பரந்த புதிய ரூல்ஸ்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணியாம்பூர் தனியார் பள்ளியில் படித்து வந்த ஸ்ரீமதி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவரது தற்கொலை மர்மமாகவே உள்ளது. இதனால் அவரது பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராடினர். இது பெரும் கலவரமாக வெடித்தது. மாணவியின் தற்கொலையை அடுத்து இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதில் அந்த தனியார் பள்ளி நடத்தும் இந்த விடுதிக்கு தக்க சான்றிதழ் ஏதும் இல்லை என்று தெரியவந்தது.

அதுமட்டுமின்றி மாணவி நின்று தற்கொலை செய்து கொண்ட இடத்தில் எந்தவித சிசிடிவி கேமராவும் இல்லை என்று பள்ளி நிர்வாகம் கூறியது. இது அனைத்தும் மாணவியின் தற்கொலையில் ஏதேனும் நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்க தோன்றுகிறது. இவ்வாறு தக்க சான்றிதழ்கள் இன்றி தேவையான கட்டுப்பாடுகள் இன்றி பள்ளிகள் இயங்கி வருவதால் தான் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் 77 வழிகாட்டு நெறிமுறைகளை கூறி உத்தரவிட்டுள்ளது.

அதில், தலைமை ஆசிரியர்கள் முதல்  முதுகலை ஆசிரியர்கள் வரை  அனைவரும் பள்ளி ஆரம்பிக்கும் நேரத்திற்கு முன்பே வந்து விட வேண்டும். பள்ளி மாணவர்களுக்கிடையே சண்டை, வரும் வழியில் ஏதேனும் அவர்களுக்கு விபத்து அல்லது பாலியல் வன்முறை போன்ற எது நடந்தாலும் உடனடியாக முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். பள்ளி பேருந்தில் வரும் மாணவர்களும் தக்க முறையில் பாதுகாப்பாக வருகிறார்களா என்று கண்காணிக்க வேண்டும்.

ஏதேனும் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை விடப்பட்டால் அந்த விடுமுறை குறித்து முதன்மை கல்வி அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். பழுதான கட்டிடத்தில் அல்லது மரத்திற்கு அடியில் வகுப்புகள் நடத்தக்கூடாது. இதுபோன்று 77 வழிகாட்டு நெறிமுறைகளை இனி கடைபிடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. இந்த 77 வழிகாட்டு நெறிமுறைகளில் தனியார் பள்ளிகளில் முறையாக ஆவணங்கள் உள்ளதா மேலும் உட்கட்டமைப்பு வசதிகள் சரியான முறையில் உள்ளதா என அவ்வபோது ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

Exit mobile version