Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வெளியூர் பெண்களை குறிவைத்து கட்டாய பாலியல் தொழிலில் ஈடுபட செய்த தம்பதியினர்! காவல் துறையினரின் அதிரடி வேட்டையில் சிக்கியது எப்படி?

சென்னை வண்ணாரப்பேட்டை பகுதிக்கு உட்பட்ட திருவொற்றியூர் நெடுஞ்சாலைகள் அமைந்துள்ள அப்பர் நகரில் கணவன், மனைவி இருவரும் ஒன்றிணைந்து பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்துவதாக வண்ணாரப்பேட்டை காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி உதவி ஆணையர் இருதயம் உள்ளிட்டோரின் உத்தரவின் படி வண்ணாரப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தவமணி தலைமையில் தனிப்படை காவல்துறையினர் சோதனை செய்து வந்தனர்.

அதன் அங்கே இரண்டு பெண்கள் உள்ளிட்டோரை வைத்து கணவன் மனைவி உள்ளிட்ட இருவரும் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்தது வெளியூரிலிருந்து வேலை தேடி வரும் பெண்களை இவர்கள் குறி வைத்து தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்ததும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இவர்களிடமிருந்து மீட்கப்பட்ட இரண்டு பெண்கள் அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதோடு கணவன் சதீஷ்குமாரையும் மனைவி சரளாவையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதோடு இவர்களிடமிருந்து 3 கைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.

வேலை தேடி வரும் வெளியூர் பெண்களை குறி வைத்து ஏமாற்றி வீட்டில் தங்க வைத்து கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்த இந்த சம்பவம் வண்ணாரப்பேட்டை பகுதியில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.

Exit mobile version