Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

#கப்புல் சேலஞ்ச்! 28 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 67 வயது திமுக நிர்வாகி!

#கப்புல் சேலஞ்ச்! 28 வயது பெண்ணை காதல் திருமணம் செய்த 67 வயது திமுக நிர்வாகி!

திருவண்ணாமலை
சவால்பூண்டியைச் சேர்ந்த
மா.சுந்தரேசன் என்பவர் பல ஆண்டுகளாக திமுகவின் பல்வேறு பொறுப்புகளில் உள்ளார்.67 வயதாகும் இவர் எ.வ.வேலுவின் தீவிர விசுவாசியாவார்.தற்போது இவர் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட துணை செயலாளராக உள்ளார்.
“சவால்பூண்டி சங்கப்பலகை” என்னும் அமைப்பை உருவாக்கி அதில் பல பேச்சாளர்களையும் உருவாக்கி வருகின்றார்.சில ஆண்டுகளுக்கு முன்பு திருவண்ணாமலையைச் சேர்ந்த 28 வயதான பெண் அபிதா என்பவர் பேச்சாளராக சுந்தரேசனுக்கு அறிமுகமானார்.
நாளடைவில் இருவருக்கிடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது.மூன்று ஆண்டுகள் இருவரும் காதலித்த நிலையில் தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
சுந்தரேசனிற்கு ஏற்கனவே மனைவி,மகள்,மகன் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனக்கு பேத்தி வயதாகும் ஒரு பெண்ணை திமுக நிர்வாகியான சுந்தரேசன் திருமணம் செய்து கொண்டது அப்பகுதியிலும்,அக்கச்சியிலும் பெரும் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவரின் இந்த செயலானது எதிர்க்கட்சியான அதிமுகவின் கேலி கிண்டலுக்கு வழிவகுத்துள்ளது.சில அதிமுக கட்சி பிரமுகர்கள் “கப்புல் சேலஞ்ச்” என்ற பெயரில் இவருடைய திருமண புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து கேலி கிண்டல் செய்து வருகின்றனர்.

Exit mobile version