“NO CAA” “NO NRC” சொல்லும் கேரளாவின் புதுமண தம்பதியர்கள்
இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியான கேரளாவின் புதுமண தம்பதிகளின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
திருமண நினைவுகளை மீண்டும் மீண்டும் மலரவைக்கும் வகையில் இருப்பது திருமணத்தில் புகைப்படம் தான். திருமணத்துக்காகச் செய்யப்படும் செலவுகளுக்கு நிகராக, திருமணத்துக்கு முன்னரும் பின்னரும் என `கப்புள் ஷூட்’ புகைப்படங்கள் எடுப்பதற்கும் செலவிடப்படுகிறது. இப்போ எல்லாம் வெடிங் அவுட்டோர் போட்டோஷூட் என்பது சர்வசாதாரணமாகிவிட்டது.
அதனால் இதில் ஏதாவது வித்தியாசமாக செய்யலாமே என கேரளா திருவனந்தபுரத்தைச் சேர்ந்த புதுமண தம்பதிகளான ஜி எல் அருண் கோபி மற்றும் ஆஷா சேகர், அவுட்டோர் போட்டோ ஷூட்டுக்கு தேர்ந்தெடுத்த இடம், கடற்கரையோ, மலைப்பிரதேசமோ இல்லை, இப்போது நாடு முழுவதும் எதிர்ப்பை சந்தித்து வரும் , குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான எதிர்ப்பையே இருவரும் திருமணத்திற்கு முந்தைய போட்டோஷூட்டின் போது ஒரு செய்தியாக தெரிவிக்க முடிவு செய்தனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி திருமணத்துக்கு தயாராகும் இவ்விரு தம்பதிகள் தங்கள் திருமணத்தின் ‘#savedate’ ப்ரீ வெடிங் ஷீட் போட்டோவுக்கும் “NO CAA” மற்றும் “NO NRC” என இரு தலைப்புகளுடன் கூடிய பலகைகளை கைகளில் வைத்தவாறு போஸ் கொடுத்து உள்ளனர். இந்த படம் திருவனந்தபுரத்தில் உள்ள பொன்முடி ஹில்ஸில் படமாக்கப்பட்டு , டிசம்பர் 18ஆம் தேதி அர்ஜுன் வி.பி. மற்றும் நிதின் சி.கே ஆகியோரின் நிறுவனமான ஃபர்ஸ்ட் லுக் போட்டோகிராஃபி என்ற போட்டோகிராபி பேஸ்புக் பக்கத்தில் முதலில் வெளியிடப்பட்டது.
விரைவில், அவர்களின் படங்கள் பல சமூக ஊடக தளங்களில் வைரலாகின, பின்னர், இது ட்விட்டர் மற்றும் Instagram பல லட்ச கணக்குகளால் பகிரப்பட்டது. பலரும் இந்த ஜோடியின் வெடிங்கிங்கின் 1st போட்டோஷூட்டை பாராட்டினர். இப்படத்தின் புகைப்படக் கலைஞர் அர்ஜுன் வுடன் பேசிய போது, சமீபத்தில் பல வெடிங் போட்டோ ஷீட்டில் கப்புள்களின் private space அற்று மிக மோசமானவைகளாக பகிர்ப்படுக்கின்றன, அதில் இருந்து தனி இருக்கவே இது போன்ற போட்டோஷூட் எடுக்க முடிவு செய்தோம் என்றும், இது இப்படி நாடு முழுவதும் வைரலாகும் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறினார்.
மேலும் மணமகள், தன் சகோதரி என்பதாலும் அதுமட்டும் இல்லமால் அவள் oru journalist என்பதாலே எனக்கு இந்த idea வை எனக்கும் implement panna mudithathu என்றும் , இந்த புகைப்படம் எங்களது சமூக உறுதிப்பாட்டையும் பொறுப்பையும் வெளி காட்ட சிறந்த வழியாக அமைந்துவிட்டது என்றும் நெகிழ்ச்சியுடன் கூறினார்.
இதைத் தொடந்து கேரளாவில் பலர் தங்கள் திருமணத்தின் “NO CAA” மற்றும் “NO NRC” என இரு தலைப்புகளுடன் கூடிய பலகைகளை கைகளில் வைத்தவாறு புகைப்படங்கள் எடுத்து வருகின்றனர்.