Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நீண்ட வருடம் குழந்தை இல்லாத தம்பதிகள் இதை செய்யுங்கள்!! 10 மாதத்தில் நல்ல விஷயம் நடக்கும்!!

இன்றைய காலகட்டத்தில் குழந்தையின்மை இந்தியாவில் அதிகரித்து வரும் பிரச்சனையாக உள்ளது.இளம் வயதினரால் உடல் மற்றும் மன ரீதியான பிரச்சனைகளால் விரைவில் கர்ப்பம் தரிக்க முடியாமல் போகிறது.இதனால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சி மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்.

திருமணமான மூன்று மாதத்தில் பெண் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால் அவளுக்கு உடல் குறைபாடு இருக்குமென்று நெருங்கிய உறவுகளே பேசுவதால் சம்மந்தப்பட்டவர்களுக்கு மன ரீதியான பிரச்சனை மற்றும் ஒருவித பயம் ஏற்படத் தொடங்குகிறது.

சிலருக்கு முதலிரவின் போது இணைந்தால் மட்டுமே சீக்கிரம் குழந்தை பிறக்கும் என்ற எண்ணம் ஏற்படுகிறது.சில காரணங்களால் முதலிரவில் இணைய முடியாமல் போனால் மன உளைச்சல் மற்றும் குழந்தை பிறக்காதோ என்ற எண்ணம் ஏற்படத் தொடங்குகிறது.புதிதாக திருமணமான தம்பதிகள் முதல் முறையாக இணையும் பொழுது பதட்டம்,பயம் மற்றும் மன ரீதியாக பல விஷயங்களை எதிர்கொள்கின்றனர்.

பெண்களுக்கு உடலுறவின் போது யோனி பகுதியில் ஒருவித இறுக்கம் ஏற்படுவதால் அவர்களால் முழுமையான தாம்பத்தியத்தை அனுபவிக்க முடிவதில்லை.அதேபோல் ஆண்களுக்கு விறைப்புத் தன்மை,விந்தணு குறைபாடு போன்ற காரணங்களால் தாம்பத்திய வாழ்க்கை முழுமை பெறாமல் போகிறது.இதனால் சிலர் செயற்கை முறையில் கருத்தரிக்க முடிவு செய்கின்றனர்.

ஆனால் உரிய சிகிச்சை மற்றும் மருத்துவ ஆலோசனை மூலம் தம்பதிகள் இயற்கையாக கருத்தரிக்க முடியும்.சரியான முறையில் உடலுறவு கொண்டால் சீக்கிரம் கருத்தரிக்க முடியும் என்பதில் தம்பதிகள் உறுதியுடன் இருக்க வேண்டும்.முதலில் தம்பதிகள் தயக்கம் காட்டாமல் மருத்துவரை அணுகி தங்கள் நிலையை கூறி உரிய ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

Exit mobile version