மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்க முடியாது ! உச்சநீதிமன்றம் மறுத்தது ஏன் தெரியுமா ?
இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்ற தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
இந்திய குடிமகன் ஒருவருக்கு மிக உயரிய விருதாக வழங்கப்படும் விருது என்றால் அது பாரத ரத்னா விருது வழங்கப்பட்டு வருகிறது. அரசியல் மற்றும் மக்கள் சேவையில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியது. இந்நிலையில் பாரத ரத்னா விருது பற்றி மீண்டும் ஒரு சர்ச்சைக் கிளம்பியுள்ளது.
பாரத ரத்னா விருது இன்னும் நமது நாட்டின் தேசத் தந்தை மகாத்மா காந்திக்கு வழங்க படவில்லை. எனவே அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க மத்திய அரசை உத்தரவிட வேண்டும் என அனில் தத்தா ஷர்மா என்பவர் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம் ‘காந்தியின் மீது மக்கள் எல்லைக்கு அப்பாற்பட்டு மதிப்பும் மரியாதையும் வைத்துள்ளனர். ஆனால் காந்திக்கு நாட்டின் உயரிய விருதான பாரத் ரத்னா விருது வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட முடியாது. அதுமட்டுமில்லாமல் மகாத்மா முன்னால் பாரத ரத்னா விருது என்ன பெரிதா ?’ எனக் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து மனுதாரர் ‘மகாத்மா காந்தி, பாரத் ரத்னாவை விட சிறந்தவர் என்று மரியாதை செய்ய உத்தரவிட வேண்டும்’ என எதிர்வாதம் செய்தார். அதற்குப் பதிலளித்த நீதிபதிகள் ‘அதுபற்றி மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும்’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
ஆனால் மனுதாரர் மத்திய அரசிடம் தனது விருப்பத்தை முறையிடலாம் என அறிவுறுத்தியது.