Divorce case:நடிகர் ஜெயம் ரவி தனது மனைவியிடம் விவாகரத்து பெற தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெயம் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். மேலும் M. குமரன் S/O மகாலட்சுமி,தனி ஒருவன் போன்ற படங்கள் ஹிட் படங்களாக அமைந்தது. நடிகர் ஜெயம் ரவி,பிரபல தொலைக்காட்சி தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தி. ஆர்த்தியை ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தான் நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி ஆகிய இருவரும் விவாகரத்து வாங்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன் தகவல்கள் வெளியானது. இதை உறுதி செய்யும் விதமாக ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி விண்ணப்பித்திருந்தார். இதற்கு அவரது மனைவி சம்மதம் தெரிவிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
விவாகரத்து பற்றி ஆர்த்தி அவர்கள் ஜெயம் ரவியிடம் தனியாக பேச விரும்புவதாக தகவல் வெளியானது. அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து இருந்தார் ஆர்த்தி. இந்த நிலையில் நடிகர் ஜெயம் ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணை முடிவில் ஜெயம் ரவி – ஆர்த்தி இருவரும் இன்றே சமரச தீர்வு மையத்தில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என உத்தரவு வழங்கி இருக்கிறார்கள்.