லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு கோர்ட் சம்மன்! நாரதா வைரல் வீடியோ!

0
217
Court summons 2 ministers for bribery Narada Viral Video!

லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் 2 அமைச்சர்களுக்கு கோர்ட் சம்மன்! நாரதா வைரல் வீடியோ!

நாரதா லஞ்ச வீடியோ விவகாரம் தொடர்பாக இரண்டு மேற்கு வங்காள மந்திரிகள் உள்பட 5 பேருக்கு சிபிஐ கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது. நவம்பர் 16-ஆம் தேதி நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டு உள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு முன்பு நாரதா செய்திகள்  என்ற செய்தி இணையதளம் மந்திரிகள் மற்றும் எம்எல்ஏக்களை சிக்கவைக்க ரகசிய வீடியோ ஒன்றை எடுத்தது.

அந்த இணையதளத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை ஒரு நிறுவனத்தின் ஊழியர்களாக மந்திரிகளிடம் அறிமுகப்படுத்திக் கொண்டனர். அதன்பிறகு முக்கிய பிரமுகர்களையும் சந்தித்து தங்களது நிறுவனத்துக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதை அடுத்து, பிரதி உபகாரமாக லஞ்சம் கொடுக்கிறோம் என்று சொன்னதோடு அதை ரகசியமாக படம் பிடித்து அந்த வீடியோவைவும் வெளியிட்டனர். அது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் லஞ்ச வீடியோவில் சிக்கிய மேற்கு வங்காளம் மந்திரிகள் சுப்ரதா முகர்ஜி, பிர்ஹாத் ஹக்கிம், திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன்மித்ரா, கொல்கத்தா முன்னாள் மேயர் சோவன் சட்டர்ஜி, பணி இடைநீக்கம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரி மிர்சா ஆகியோர் மீது சிபிஐ அமலாக்கத் துறை சார்பில் வழக்கு பதிவு செய்தனர். 5 பேரும் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு விடுதலை செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் இந்த விவகாரத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கு கொல்கத்தாவில் உள்ள சிபிஐ கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. இரண்டு மந்திரிகள் உட்பட 5 பேருக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 5 பேரும் நவம்பர் 16ஆம் தேதி கோர்ட்டில் நேரில் வந்து ஆஜராகுமாறும் அவர் கூறியுள்ளார். எம்.எல்.ஏக்களாக  இருப்பதால் அவர்கள் மூவருக்கும் சபாநாயகர் அலுவலகம் மூலம் சம்மன் அனுப்புமாறும் மற்ற இரண்டு பேருக்கும் வீட்டு முகவரிக்கு நேரடியாக அனுப்புமாறும் உத்தரவிட்டுள்ளார்.