Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மனைவி கொண்டு வரும் சீதனத்தில் கணவருக்கு எந்த உரிமையும் கிடையாது – நீதிமன்றம் அதிரடி..!!

Court takes action

Court takes action

மனைவி கொண்டு வரும் சீதனத்தில் கணவருக்கு எந்த உரிமையும் கிடையாது – நீதிமன்றம் அதிரடி..!!

திருமணத்தின் போது மணப்பெண் அவரது பிறந்த வீட்டில் இருந்து கொண்டு வரும் சீதனப்பொருட்கள் மற்றும் சொத்துக்கள் மீது கணவருக்கு எந்தவித உரிமையும் கிடையாது என டெல்லி உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

அதன்படி கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணத்தின் போது தனது பெற்றோர் தனக்கு சீதனமாக வழங்கிய 90 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளை தன் கணவர் எடுத்துக் கொண்டார். எனவே அதை அவர் திருப்பித் தர உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது, “தான் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு சீதனமாக மனைவி எடுத்து வரும் சொத்து கணவரின் சொத்தாக மாறாது. ஒருவேளை அவசர தேவைக்காக அந்த சொத்தை கணவர் பயன்படுத்தி இருந்தால், அதை திருப்பி தர வேண்டியது கணவனின் கடமை.

எனவே இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பெண்ணின் நகைகளை பயன்படுத்திய அவரின் கணவர் நகைகளுக்கு ஈடாக 25 லட்ச ரூபாயை மனைவிக்கு வழங்க வேண்டுமென” அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க அப்படி என்றால் கணவர் வீட்டு சொத்தில் மட்டும் மனைவி எப்படி உரிமை கோரலாம்? அது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? என ஆண்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Exit mobile version