கமலை மறித்து சரமாரியாக கேள்வி கேட்ட பெண்… வைரல் வீடியோ…!

0
109
Kamal

தமிழக சட்டமன்ற தேர்தல் கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி சரத்குமாரின் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, ரவி பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கமல் ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ள கமல் ஹாசன், தேர்தல் பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார்.

Kamal hassan

இந்நிலையில் இன்று கோவையில் தன் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில் மக்கள் கேண்டீன் திட்டம், மருத்துவ படிப்பிற்கு NEET2-க்கு பதிலாக SEET தேர்வு ஆகியவை நடத்தப்படும் என பல்வேறு வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன. மக்களை கவரும் பல திட்டங்களை அறிவித்த பிறகு கோவை அம்மன் குளம் பகுதியில் வீடு, வீடாக சென்று கமல் வாக்கு சேகரித்தார்.

அப்போது அந்த தொகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கமலை வழிமறித்து கேள்வி எழுப்பினார். மக்களுக்காக தானே நீங்க வந்திருக்கீங்க. நாங்க உங்க பின்னாலே ஓடிவரனுமா என சரமாரியாக கேள்வி எழுப்பினார். கமலுடன் இருந்த நிர்வாகிகள் அந்த பெண்ணை தடுத்தனர். அப்போது நிர்வாகிகளை அமைதியாக இருக்கச் சொன்ன கமல் ஹாசன், இதுக்கு முன்னாடி வந்திருக்கிற அரசியல்வாதிகளிடம் அப்படி கேள்வி கேட்டுள்ளீர்களா? என கேள்வி கேட்டார்.

கோவை அம்மன் குளம் குடியிருப்பு பகுதியில் நிலவும் குப்பை உள்ளிட்ட சுகாதார பிரச்சனைகளை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை என்றும், நீங்களாவது கேட்பீர்களா? என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு பதிலளித்த கமல், ஒரு சாக்கடை தீவுக்குள் வாழ்வது அரசியல்வாதிகளுக்கு தெரியவில்லை என்பதே இவர்களுடைய கோபம். இங்கிருந்து திருடி தான் வாழ வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை, அது அவங்களுக்கும் தெரியும். என்னை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் இங்கு வந்து இந்த பிரச்சனையை தீர்க்காமல் போகமாட்டேன் என கூறினார்.