வந்துவிட்டது குழந்தைகளுக்கான கோவாக்சின்! வல்லுநர் குழு வெளியிட்ட புதிய அறிவிப்பு!
கொரோனா தொற்றின் பிடியில் இருந்த மக்கள் தற்பொழுது தான் மீண்டு வந்துள்ளனர்.இன்னிலையில் முதல் மற்றும் 2 என்ற அலைகளை கடந்துள்ளனர். தற்போது மூன்றாவது அலையை நோக்கி சென்று கொண்டுள்ளனர். இந்நிலையில் தொற்று அதிகமாகும் பரவாமலிருக்க மக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதனால் நமது தமிழகத்தில் வாரந்தோறும் மெகா தடுப்பூசி என்ற முகாம் ஒன்று நடந்து வருகிறது.
தற்பொழுது 18 வயதிற்க்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி நடைமுறையில் உள்ளது. 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு தடுப்பூசி இன்றளவும் நடைமுறைக்கு வரவில்லை. குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது குறித்து சோதனை நடந்து வருகிறது. அந்த வகையில் இரண்டு முதல் 18 வயது உடையவருக்கு கோவாவின் தடுப்பூசி செலுத்துவதற்கான பரிசோதனை கடந்த மூன்று மாதங்களுக்கு மேல் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்று வருகிறது.மருத்துவர்கள் ,விஞ்ஞானிகள் மற்றும் மருந்துகளை ஆய்வு செய்யக் கூடிய ஆய்வாளர்கள் உள்ளிட்ட சிறப்பு குழு மூன்று கட்டங்களாக பல்வேறு தகவல்களின் அடிப்படையில் சோதனையை நடத்தியது.
சோதனையின் முடிவில் இரண்டு முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தலாம் என்று கூறியுள்ளனர். இந்த முடிவுகளை தற்போது இந்திய மருந்துகள் தரக்கட்டுப்பாடு அமைப்பிற்கு அவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். இந்திய தரக் கட்டுப்பாடு அமைப்பு தற்போது ஆவணங்களை சரிபார்த்து அனைத்து விதிமுறைகளும் சரியாக கடைபிடிக்க பட்டுள்ளதா என்பதை கண்டறிந்து வருகிறது. மேலும் பக்க விளைவுகள் குறித்து ஐ சி எம் ஆர் அமைப்பிற்கு அனுப்பி வைத்தனர். அவர்களும் இன்னும் சில வாரங்களில் நடவடிக்கைகள் மேற்கொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முடிவுகளைக் கண்டு இவ்வருடத்தின் இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.