குறைந்தது தடுப்பூசியின் விலை!

0
142

சென்னை மாநகராட்சி சார்பாக 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நல மையங்கள், அதேபோல அனைத்து அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் நோய்த்தடுப்பு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இதுவரையில் கோவாக்ஸின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த 27 ஆம் தேதி வரை13லட்சத்து 97 ஆயிரத்து195 பேருக்கு போடப்பட்டு இருக்கிறது.

இந்த தடுப்பூசி சென்னையில் பல இடங்களில் கட்டுப்பாடுடன் இருந்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் முதல் தவணை செலுத்திக்கொண்டவர்கள் இரண்டாவது தவணை செலுத்த இயலாமல் மருத்துவமனை மருத்துவமனையாக ஏறி இறங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

இதுபோன்ற நிலையில்,சென்னை மாநகராட்சி சார்பாக வெளியிடப்பட்ட இருக்கின்ற அறிவிப்பு ஒன்றில் கோவாக்ஸின் தடுப்பூசி வினியோகம் குறைந்து இருப்பதால் இரண்டாவது தவணை செலுத்தி கொள்வோருக்கு மட்டுமே தற்போது தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு சில மையங்களில் மட்டும் தான் கிடைக்கிறது. இரண்டாவது தவணை தடுப்பூசி கிடைக்கவில்லை என்றால் இந்த இணையதளத்தில் வலைதளத்தில் விண்ணப்பம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியை அடுத்து கோவாக்சின் தடுப்பூசியின் விலையும் 400 ரூபாயாக குறைத்திருக்கிறது பாரத்பயோடெக் நிறுவனம்.