Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தின் 25 திற்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நோய் தொற்று பாதிப்பு குறைந்தது! சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்!

தமிழ்நாட்டில் நேற்றைய நோய் தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கின்ற செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக ஒரு லட்சத்து 929 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது, இதில் 393 ஆண்கள் மற்றும் 280 ஒரு பெண்கள் என்று ஒட்டுமொத்தமாக 674 பேருக்கு நோய் தொற்று புதிதாக ஏற்பட்டு இருக்கிறது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 116 பேரும், கோவையில் 102 பேரும், ஈரோட்டில் 51 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 48 பேரும், திருப்பூரில் 47 பேரும், சேலத்தில் 42 பேரும், நாமக்கல்லில் 45 பேரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

அத்துடன் குறைந்தபட்சமாக பெரம்பலூர், தேனி, தூத்துக்குடி, உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவருக்கும் மயிலாடுதுறை ,கள்ளக்குறிச்சியில் தலா 2 பேருக்கும் உட்பட 30 மாவட்டங்களில் 20க்கும் குறைவானவர்களுக்கு நோய்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் தென்காசி, இராமநாதபுரத்தில் நேற்று ஒருவர் கூட இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்படவில்லை. 12 வயதிற்கு உட்பட்ட 53 குழந்தைகளுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் 105 பேருக்கும், இந்த நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 45 லட்சத்து 60 ஆயிரத்து 671 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டு இருக்கிறது. இதில் 15 லட்சத்து 96 ஆயிரத்து 657 ஆண்களும், 11 லட்சத்து 38 ஆயிரத்து 794 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் உட்பட 27 லட்சத்து 35 ஆயிரத்து 389 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அதில் 12 வயதிற்கு உட்பட்ட 1 லட்சத்து 4 ஆயிரத்து 586 குழந்தைகளும், 60 வயதிற்கு மேற்பட்ட 3 லட்சத்து 96 ஆயிரத்து 184 முதியவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

இந்த நோய்த்தொற்றுக்கு தமிழக அரசு மருத்துவமனைகளில் 9 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேரும் என்று 13 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று பலியாகி இருக்கிறார்கள். அதில் அதிகபட்சமாக தஞ்சை, சேலம், திருச்சி, நாமக்கல், உள்ளிட்ட பகுதிகளில் 2 பேரும், திருப்பூர், கடலூர், திருவள்ளூர், சென்னை, கோவை, உள்ளிட்ட பகுதிகளில் தலா ஒருவரும் என 19 மாவட்டங்களில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது. 29 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை, தமிழ்நாட்டில் இதுவரையில் ஒட்டுமொத்தமாக 36 ஆயிரத்து 212 பேர் இந்த நோய் தொற்றால் பலியாகியிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நேற்று 38,718 ஆக்சிஜன் படுக்கைகள், 25845 ஆக்சிஜன் வசதி இல்லாத சாதாரண படுக்கைகள், 8211 ஐசியு படுக்கைகள் என்று ஒட்டுமொத்தமாக 72774 படுகைகள் மருத்துவமனைகளில் காலியாக இருக்கிறது. நோய் பாதிப்பில் இருந்து நேற்று சுமார் 7 108 பேர் முழுமையாக குணம் அடைந்து டிஸ்சார்ச் செய்யப்பட்டார்கள். இதில் அதிகபட்சமாக கோயமுத்தூரில் 123 பேரும், சென்னையில் 106 பேரும் செங்கல்பட்டில் 55 பேரும், அடங்குவர் என்று சொல்லப்படுகிறது. இதுவரையில் 26 லட்சத்து 93 ஆயிரத்து 54 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 7773 ஆக இருக்கிறது என அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version