Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து! மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை!

TamilNadu Government

TamilNadu Government

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின்  உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.

கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுக்கக் கோரி கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தமிழக அரசு தரப்பு வழக்குரைஞர், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சேராதவர்கள் சிகிச்சை பெற தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது அரசு மருத்துவமனைகளில் படுக்கைகள் உள்ளதால் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அவர்,  அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய நட வடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு  எச்சரித்திருப்பதாக விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சேர்வதற்கான வருமான உச்சவரம்பை 2 மடங்காக அதிகரிக்க வேண்டும் என பரிந்துரைத்த நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்தனர்.
Exit mobile version