Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மனிதர்கள் மீது வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து!

கடந்த டிசம்பர் மாதாம் சீனாவின் வுகான் மாகானத்தில் பரவ துவங்கிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்தை கண்டுபிடுக்க இந்தியா உட்பட பல நாடுகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. இதில் சில நாடுகள் எலிகள் மீதான வெற்றிகரமான பரிசோதனைக்கு பின் மனிதர்கள் மீது மருந்து பரிசோதனையை மேற்கொண்டுள்ளது, சில நாடுகள் மேற்கொள்ள திட்டமிட்டு வருகிறது.

இந்நிலையில் சீனா கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதல்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவேறியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. இது உலகம் முழுவதும் நடைபெறும் தடுப்பு மருந்துகளுக்கான ஆய்வில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும், அதனை யார் வேண்டுமானாலும் பரிசோதித்து அறியலாம் என்றும் சீனா அறிவித்துள்ளது.

இந்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ள பிரிட்டனை சேர்ந்த பிரபல மருத்துவ இதழான ‘The Lancet’, சீனா கண்டறிந்துள்ள தடுப்பு மருந்து மிக பாதுகாப்பானது என்றும், கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை விரைவாக அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தடுப்பு மருந்தை பரிசோதிக்க 108 தன்னார்வலர்களை தேர்வு செய்த சீனா, அவர்களை 3 குழுக்களாக பிரித்து, அவர்களுக்கு மாறுபட்ட அளவுகளில் மருந்தை அவர்கள் உடலில் செலுத்தியுள்ளது.

Ad5-nCoV எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்து, செலுத்தப்பட்டவர்கள் தொடர்ந்து 28 நாட்கள் கண்காணிக்கப்பட்டனர். அது வரை அவர்களது உடலில் எந்த தீவிரமான மாற்றங்களோ, பின் விளைவுகளோ கண்டறியப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.

இதனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த தடுப்பு மருந்தை மனித உடல் ஏற்றுக்கொள்கிறது என்பதாகும்.

இந்த தடுப்பு மருந்து சார்ஸ் வைரசுக்கு எதிராகவும் போரிடக் கூடியது என்றும் The Lancet இதழ் தனது கட்டுரையில் கூறியுள்ளது.

முதற்கட்ட பரிசோதனை வெற்றியடைந்ததையடுத்து 2வது கட்டமாக 508 தன்னார்வலர்களுக்கு தடுப்பு மருந்தை செலுத்தி பரிசோதிக்கும் நடவடிக்கையை சீனா மேற்கொண்டுள்ளது. இது வெற்றி பெறும் பட்சத்தில் இது விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு அறிமுகப்படுத்தப்படும் என கூறப்படுகிறது.

இந்த அடுத்த கட்ட பரிசோதனையின் முடிவை பொருத்து உலகெங்கும் கொரோனா தொற்றுக்கு மருந்தை ஆராய்ந்து வரும் வல்லுனர்களுக்கு புதிய ஒளியை பாய்ச்சும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version