தீபாவளி பண்டிகையன்று பட்டாசு வெடிப்பது ஏன்? உண்மையான காரணம் இதோ
நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளியும் ஒன்று. அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் தீபாவளி பண்டிகையானது நாடு முழுவதும் மிக சிறப்பாக கொண்டாடப்படும். இந்த தீபாவளி தினத்தில் அனைவரும் புத்தாடை அணிந்து தீபம் ஏற்றி வழிபாடு என தீபாவளிக்கான பாரம்பரிய விஷயங்களை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள்.
அந்த வகையில் தீபாவளி பண்டிகை தினத்தில் தினத்தில் மற்றவைகளை விட முக்கியமானதாக இருப்பது பட்டாசு வெடிப்பது தான். தீபாவளி தினத்தன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே பட்டாசு வெடிக்க விரும்புவார்கள். இவ்வாறு தீபாவளியன்று விளக்கு ஏற்றுவது எதற்கு,பட்டாசு வெடிப்பது எதற்கு என்று புராண கதைகளும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: தீபாவளி – தந்தேரஸ் தினம் : விளக்கு ஏற்றுவது ஏன்? அதன் சிறப்புகள் மற்றும் செல்வ பூஜை! புராணங்கள் சொல்லும் கதை
இந்நிலையில் தற்போது சிலர் சுற்று சூழல் மாசுபடும் என்ற காரணத்தை கூறி பட்டாசு வெடிக்க கூடாது என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.அதேபோல மறுபுறம் ஒரு நாள் வெடிக்கும் பட்டாசு மட்டுமே சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதாக கூறுவது என்பது தவறு,இது பண்பாட்டை சிதைக்கும் செயல் என கருத்து கூறி வருகின்றனர்.இவையனைத்தையும் கருத்தில் கொண்ட அரசு தீபாவளியன்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பட்டாசு வெடிக்க அனுமதி அளித்துள்ளது.
தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு வெடிப்பதற்கான காரணங்கள் குறித்து பல்வேறு புராண கதைகள் உலாவி வருகிறது. அதில் ஆன்மீக காரணமாக காமம், குரோதம், கோபம், மோகம், மாச்சறியங்கள் போன்ற தீய குணங்கள் இறைவனின் திருநாமங்களால் தூள் தூளாக்க வேண்டும் .இதனை குறிப்பதற்காக தீபாவளி அன்று பட்டாசு வெடித்து மகிழ்கின்றோம். மேலும் பட்டாசு என்பது வெடித்து சிதறும் தன்மை உடையது அதனால் இதை உணர்த்தும் வகையில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்கபடுகிறது.
மேலும் ஒரு மனிதன் கோபம் மற்றும் ஆக்ரோஷம் போன்ற விஷயங்களில் இருந்து வெடித்து வெளியேற வேண்டும்.நாம் நம்முடைய உணர்வுகளை மற்றும் ஆசைகளை அடக்கி வைத்தால் அது ஒரு நாள் அதற்குரிய எல்லையை அடையும். எனவே அந்த சமயத்தில் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.பண்டைய காலத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு உளவியல் பயிற்சியாகவே இந்த பட்டாசு வெடிக்கும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கியதாகவும் கூறப்படுகிறது.