எனக்கு இரவில் தூக்கம் வரல! இப்படியும் ஒரு பள்ளியா? கிரிக்கெட் வீரர் ட்வீட்!
வரும் காலங்களில் நம் பெண் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற பயம் எல்லோருக்கும் உண்டு.ஏனென்றால் நடக்கும் ஒவ்வொரு சம்பவமும் அப்படி பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோரின் மனதில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
தற்போது சென்னை பி.எஸ்.பி.பி. பள்ளியில் நடந்த சம்பவமும் அப்படி அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.பிள்ளைகளை எங்குதான் நம்பிக்கையுடன் அனுப்ப முடியும் என்ற கேள்விகுறி வந்துள்ளது.
சென்னையில் உள்ள பத்மா ஷேஷாத்ரி பால பவன் பள்ளியின் கணக்கியல் மற்றும் வணிகவியல் கற்பிக்கும் ஆசிரியர் ராஜகோபால் மாணவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சமூக வலைத்தளங்களில் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.
இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் முன்னாள் மாணவிகள் தங்களிடம் தவறாக பேசியதை பாடகி சின்மயி உட்பட பலர் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் அதனை பதிவு செய்து வந்த நிலையில் விசாரனைக்கு உத்தரவிடப்பட்டு தற்பொழுது கைது செய்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்திற்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பள்ளியில் படித்த முன்னாள் மாணவரான அஸ்வின் தனது கண்டனத்தை பதிவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் எனக்கு உறங்க முடியாத இரவுகளை இந்த சம்பவம் ஏற்படுத்தியிருக்கிறது. நான் அங்கு படித்த முன்னாள் மாணவன் என்பது மட்டுமில்லாமல் நான் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை என்பதை நினைத்தால் என் மனம் பதறுகிறது. ராஜகோபாலன் என்ற பெயர் மட்டும் தான் இன்று வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஆனால் இது போன்று பலர் ஊடுருவி இருக்கின்றனர். வரும் காலங்களில் இவை நிகழாமல் இருக்க இது போன்ற மனநிலையுடன் இருப்பவர்களை களை எடுக்க வேண்டும்.
மொத்த அமைப்புகளையும் சரிசெய்ய வேண்டிய நிலையில் உள்ளோம் சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை நான் அறிவேன். எனினும் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து இதுபோன்ற பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரவேண்டும். அதுவே வருங்காலத்தில் இதுபோன்ற செயல்கள் நிகழாமல் தடுக்க உதவும் என்று பள்ளியின் முன்னால் மாணவரும் கிரிக்கெட் வீரருமான அஸ்வின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.