லால் சலாம் படத்தில் இணைந்த கிரிக்கெட் வீரர்!! ரஜினி கொடுத்த அப்டேட்!!
நடிகர் ரஜினியின் மூத்த மகளான ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். இந்த திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார் .
இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் “மொய்தீன் பாய்” என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ரஜினி மும்பை சென்றார். அப்போது ரஜினியுடன் நடிக்கும் நடிகர் படப்பிடிப்புக்கு தொடர்ந்து இரு நாட்களாக வராததால் ரஜினி சென்னை திரும்பி விட்டார்.
இந்நிலையில் லால் சலாம் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை ரஜினியே பகிர்ந்துள்ளார். அதாவது இந்த படத்தில் முன்னால் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் நடித்துள்ளார். இதை தனது சமுக வலைதளத்தில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்
“முதன்முறையாக உலகக்கோப்பையை வென்று இந்தியாவை பெருமைப்படுத்திய பழம்பெரும், மிகவும் மரியாதைக்குரிய மற்றும் அற்புதமான மனிதரான கபில்தேவ்ஜியுடன் இணைந்து பணியாற்றுவது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது” என பதிவிட்டுள்ளார். தற்போது இந்த பதிவு பெரும் வைரலாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.