Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஜய் பாடலுக்கு நடனம் ஆடிய கிரிக்கெட் வீரர்! தமிழில் பாராட்டிய கேப்டன்!

Cricketer who danced to Vijay song! Captain praised in Tamil!

Cricketer who danced to Vijay song! Captain praised in Tamil!

விஜய் பாடலுக்கு நடனம் ஆடிய கிரிக்கெட் வீரர்! தமிழில் பாராட்டிய கேப்டன்!

இந்திய மற்றும் இங்கிலாந்து அணிக்கு இடையே நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டி நம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நம் இந்திய அணி இங்கிலாந்து அணியை விட அதிக ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்த நமது தமிழக விளையாட்டு வீரர் அஸ்வின் ரவிச்சந்தர் அவர்களுக்கு ஆட்ட நாயகன் விருதும் கிடைத்தது.

இதன் காரணமாக அஸ்வின் அவர்களுக்கு பாராட்டுக்களும் , வாழ்த்துக்களும் குவிந்து வருகின்றன. இந்நிலையில் இன்று நடைப்பெற்ற ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த வேளையில் யாரும் எதிர்பாராத தருணத்தில் கிரிக்கெட் மைதானத்தில் நமது இளைய தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் வெளிவந்துள்ள மாஸ்டர் திரைபடத்தில் இருக்கும் வாத்தி கம்மிங் என்ற பாடலுக்கு நடனம் ஆடி காண்போர் அனைவரையும் மகிழ்வித்து உள்ளார்.

இதுமட்டுமன்றி தொடர்ந்து நடைபெற்று வந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீரர்களுக்கு அஸ்வின் பந்து வீசிய போது வேற லெவல் அஸ்வின் என்று நம் இந்திய அணி கேப்டன் விராட் கோலி தமிழில் பாராட்டியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதை கண்ட ரிஷபன் தமிழ் தெரியவில்லை என்றாலும் அவரும் சேர்ந்து வேற லெவல் என்று பாராட்டிய வீடியோ மற்றும் ஆடியோக்கள் இணையத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Exit mobile version