கள்ளக் காதல் ஜாலி! பார்த்த மகன் காலி! மதுரையில் நடந்த கொடூரம்!!
கள்ளகாதலுக்காக தான் பெற்ற மகனையே கழுத்தை நெரித்து கொன்ற கொடூரமான சம்பவம் மதுரையில் அரங்கேறியுள்ளது.
மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டி அருகேயுள்ள குச்சமரபட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார். இவரின் மனைவி ஆனந்தஜோதி இவர்களுக்கு ஜீவா , லாவண்யா என இரு குழந்தைகள் உள்ளனர். குடும்ப வருமானத்திற்காக ராம்குமார் கொத்தனார் வேலை செய்து வந்தார். அவரது மனைவி ஆனந்தஜோதி விருதுநகரில் ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார்.

இவர்களின் ஐந்து வயது மகனான ஜீவா அங்கிருந்த அங்கன்வாடியில் படித்து வந்தார். சம்பவ நாளன்று பள்ளியில் இருந்து வந்த ஜீவா வீட்டில் தூங்கியுள்ளார். நீண்ட நேரமாக தூங்கிய ஜீவாவை ஆனந்தஜோதி எழுப்பியும் எந்த அசைவும் இல்லை. இதன்பிறகு சிறுவனை விருதுகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஜீவா இறந்து நீண்ட நேரம் ஆவதாகவும் சிறுவனின் கழுத்தை நெரித்த தடயம் இருப்பதாகவும் கூறினர். இது எப்படி நடந்தது என மனைவியிடம் ராம்குமார் கேள்விகளை கேட்டபோது மழுப்பலான பதிலை ஆனந்தஜோதி கூறியதால் ராம்குமாருக்கு மனைவியின் மேல் சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில், தனது மகன் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் மனைவியின் மீதும் சந்தேகம் இருப்பதாக சத்திரப்பட்டி காவல் நிலையத்தில் ராம்குமார் புகாரளித்தார். இதனையடுத்து ஆனந்தஜோதியிடம் கிடுக்குப் பிடி விசாரணையை போலீசார் மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில் தனது மகனை தானே கொன்றதாக ஒப்புக் கொண்டார்.

நீண்ட நாட்களாக ஆனந்தஜோதிக்கும், அவரது உறவினரான மருதுபாண்டி என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது. இருவரும் வீட்டில் தனியாக உல்லாசம் அனுபவித்ததை மகன் ஜீவா பார்த்துவிட்டதாலும், இது ராம்குமாருக்கு தெரிந்தால் பிரச்சினையாகும் என்பதால் நானும், மருதுபாண்டியும் சேர்ந்து ஜீவாவை கொன்றதாக தனது வாக்குமூலத்தில் ஆனந்தஜோதி தெரிவித்தார். இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.