Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! இளைஞன் தலைமறைவு! மாணவி எடுத்த விபரீதமுடிவு!

பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பம்!! இளைஞன் தலைமறைவு! மாணவி எடுத்த விபரீதமுடிவு!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவையில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் என்பவர். 20 வயதாகும் இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலிருந்து. வந்துள்ளார்.இந்நிலையில் பக்கத்து கிராமத்தில் வசிக்கும் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை காதலித்து வந்துள்ளார்.இருவரும் காதல் வயப்பட அதிக மோகத்தால் தொடர்ச்சியாக தனிமையில் இருந்துள்ளனர்.இதன் விளைவாக மாணவி கர்ப்பம் அடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்த பத்தாம் வகுப்பு மாணவி திடீரென்று காணாமல் போய்யுள்ளார்.இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர்கள் அக்கம்பக்கத்தில் விசாரித்தும் தேடி பார்த்தும் உள்ளனர்.எங்க தேடியும் அந்தப் பெண் கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.பெற்றோர்கள் அளித்த புகாரின் பெயரில்,காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அந்த மாணவியை தேடும் வேட்டையில் இறங்கினர்.

இந்நிலையில் பக்கத்து ஊரில் உள்ள ஒரு கிணற்றுக்கு அருகே அந்த பத்தாம் வகுப்பு மாணவி மயங்கி கிடப்பது தெரிய வந்தது.இதனையடுத்து அந்த மாணவியை மீட்டு காரைக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.

இதுகுறித்து நடத்திய விசாரணையில் முத்துக்குமார் மாணவியை அழைத்து வந்து குடும்ப நடத்தியதாகவும், திடீரென அந்த மாணவியை விட்டுவிட்டு ஓடியதாகவும், இதன் காரணமாகதான் அந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளதும் தெரிய வந்தது.மாணவி அளித்த வாக்குமூலத்தின் பெயரில் முத்துக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Exit mobile version