கஞ்சா ரவுடிக்கு மாவுகட்டு! காவல்துறையின் மனிதநேயம்! கடலூரில் தரமான சம்பவம்..!!

0
134

கஞ்சா ரவுடிக்கு மாவுகட்டு! காவல்துறையின் மனிதநேயம்! கடலூரில் தரமான சம்பவம்..!!

மத்திய பாதுகாப்பு படை வீரர்களை கத்தியால் குத்தி பயமுறுத்திய பிரபல ரவுடி கஞ்சா மணி, தப்பிச்சென்ற போது வழுக்கி விழுந்ததால் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவுகட்டு போடப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக கடலூர் மாவட்டத்தில் கெத்து காட்டி வந்த கஞ்சா வியாபாரி மணி, ஒரு கட்டத்தில் காவல்துறைக்கே சவால்விட்டான். சில மாதங்களுக்கு முன்பு காவல்துறை கஞ்சாமணியை பிடிக்க சென்ற போது கத்தியால் கீறிக்கொண்டு போலீசுக்கு படம் காட்டினான்.

ஏற்கனவே கஞ்சா வழக்கில் சிறைக்கு சென்று ஜாமீனில் வெளிவந்த கஞ்சா மணி சமீபத்தில் நிலக்கரி சுரங்கத்தில் காப்பர் கம்பி திருடிய போது மத்திய பாதுகாப்பு படையிடம் சிக்கிக் கொண்டான். பாதுகாப்பு வீரரை கத்தியால் குத்திவிட்டு ஓடியவனை தாஸ் என்கிற பாதுகாப்பு படை வீரர் துரத்திச் சென்றார். கஞ்சா மணியின் பிடியில் மாட்டிக்கொண்ட தாஸை பயமுறுத்திய வீடியோ சம்பவம் இணையத்தில் வைரலாகியது.

இதையடுத்து, சட்டத்திற்கு எதிரான செயலில் ஈடுபட்ட கஞ்சா மணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கைது செய்ய உத்தரவிட்டார். கஞ்சா மணியை தேடி சிறப்பு படை விரட்டி சென்றபோது தப்பி வழுக்கி விழுந்ததில் கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மணியை மீட்டு மனிதநேயத்துடன் கடலூர் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிறப்பான மாவுக்கட்டு மருத்துவம் செய்யப்பட்டது.

தன்னை ஒரு தாதா போல் காட்டிக் கொண்ட ரவுயின் நிலைமை இன்று மாவுக்கட்டில் முடிந்து போனது. சிகிச்சை முடிந்து நீதிமன்றம் கொண்டு செல்லும் வேலைகள் நடந்து வருகிறது. இதுபோன்று சமீபத்தில் மர்ம நபர்களின் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த உதவி ஆய்வாளர் வில்சன் அவர்களை கொன்றவர்களையும் விரைவில் பிடித்து மாவுக்கட்டு போட வேண்டும் என்பதே மக்களின் எதிர்ப்பார்பாக உள்ளது.