முடங்கும் இரட்டை இலை!! அதிமுக இடத்திற்கு தமாக.. தமிழக அரசியலில் அடுத்தடுத்த பரபரப்பு!!
ஈரோடு மாவட்டத்தில் ஈவேரா மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து அந்த தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த இடைத்தேர்தலானது ஆறு மாத காலத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்ற சூழலில் தற்பொழுது 14 நாட்களுக்குள் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் ஒவ்வொரு கட்சியை சார்ந்தவர்களும் யாரை இறக்கலாம் என்று ஆலோசனை நடத்தி வரும் சூழலில் அதிமுக மட்டும் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாமல் தடுமாறி வருகிறது.
ஏனென்றால் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் நடந்து கொண்டிருப்பதால், முதலில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஓ பன்னீர் செல்வத்தை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே நீக்கியதோடு கட்சியின் ஒருமித்த கருத்தோடு இடைக்கால பொது செயலாளர் ஆகவும் பதவியேற்றார்.
ஆனால் இது செல்லாது என்று ஓ பன்னீர்செல்வம் அவர்கள், நீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தொடுத்து தற்பொழுது வரை இதற்கு தீர்ப்பு கிடைக்காமல் நிலுவையிலே உள்ளது.
இந்த சூழலில் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றால் குறிப்பாக இரட்டை இலை சின்னத்திற்காக ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் இருவரும் கையொப்பமிட வேண்டும். ஆனால் ஒருபோதும் ஓ பன்னீர்செல்வத்துடன் இணைய மாட்டேன் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திட்டவட்டமாக கூறிவரும் நிலையில் இவர்கள் ஒத்து போகவில்லை என்றால் கட்டாயம் இரட்டை இலை சின்னம் முடக்கப்படும்.
ஆனால் அவ்வாறு சின்ன முடக்கப்பட்டால் இது பெரும்பாலானோருக்கு சாதகமாக அமைந்துவிடும் என்பதால் இவர்களுக்கு பதிலாக தமாக களமிறங்க வைப்பதாக கூறுகின்றனர்.
இவர்கள் கூட்டணி குறித்து தான் அதிமுக மூத்த நிர்வாகிகள் இன்று ஜி கே வாசன் உடன் ஆலோசனை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது.அதேபோல ஜி.கே. வாசனும் அதிமுக மூத்த நிர்வாகிகளும் சந்தித்து உள்ளனர்.
எனவே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பதிலாக தமாக களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். மேற்கொண்டு எந்த வேட்பாளரை இறக்குவது என்பது குறித்தும் ஆலோசனை செய்வதாக தெரிவித்துள்ளனர். கட்சியின் சின்னம் முடக்காமல் இருக்க எடப்பாடி பழனிசாமி அவர்களின் மூத்த நிர்வாகிகளை கொண்டு தொடர்ந்து காய் நகர்த்தி வருகிறார். இதனால் அரசியல் சுற்றுவட்டாரத்தில் பரபரப்பு சூழல் உண்டாகியுள்ளது.