கூட்டணிக்காக தலித் மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்தாரா திருமாவளவன்!
கடந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது.
மக்களவை தேர்தல் முதல் தற்போது நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் வரை கூட்டணி கட்சியான திமுக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவில்லை என பல்வேறு தரப்பிலிருந்தும் விமர்சனங்கள் எழுந்து வந்தன.
அதாவது மக்களவை தேர்தலில் திமுக உறுப்பினராக மாறி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்தது,விசிக போட்டியிடும் தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளில் விசிக தலைவர் திருமாவளவன் மற்றும் அந்த கட்சியை சேர்ந்த யாரும் பிரச்சாரம் பிரச்சாரம் செய்ய விடாமல் நவீன தீண்டாமையை ஏற்படுத்தியது, மற்ற கூட்டணி கட்சிகளுக்கு கோடி கணக்கில் தேர்தல் செலவுக்கு பணம் கொடுத்த திமுக விசிகவை புறக்கணித்தது என தொடர்ந்து விசிகவிற்கு எதிராகவே செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்திலும் இதே நிலையே நீடித்தது என்பது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக இடைத்தேர்தல் பிரசாரத்தின் பொது திமுக தலைவர் பஞ்சமி நில விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க அதை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விமர்சனம் செய்ய அந்த விவகாரம் தமிழக அரசியலில் பெரிய விவாதமாக மாறியுள்ளது. தலித் மக்களின் உரிமைக்காக பஞ்சமி நிலம் குறித்து மருத்துவர் ராமதாஸ் தீவிரமாக கேள்வியெழுப்பி வருகிறார். பாஜக உள்ளிட்ட கட்சிகளும் இந்த விவகாரத்தில் தலித் மக்களின் உரிமைக்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தலித் மக்களுக்காகவும், அவர்களின் மேம்பாட்டிற்காகவும் அரசியல் செய்வதாக கட்சி ஆரம்பித்த திருமாவளவன் அதை பற்றி எதுவும் கண்டு கொள்ளாமல் கூட்டணி கட்சியான திமுகவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றசாட்டு எழுந்துள்ளது. தொலைக்காட்சி விவாதங்களின் போது கூட முரசொலி அலுவலக பஞ்சமி நில விவகாரம் குறித்த கேள்விகள் எழுப்பிய போது அதற்கு முறையான பதில் அளிக்காமல் மழுப்பலான பதிலையே திருமாவளவன் அளித்திருந்தார்.
இது போன்ற தலித் மக்களின் உரிமைகளை மீட்டு தராமல் வெறும் கலப்பு திருமணத்தின் மூலம் மட்டுமே அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி விடலாம் என நினைத்து விட்டாரா? இல்லை அதன் மூலம் மக்களிடையே தொடர்ந்து பிரிவினைகளை உருவாக்கி அரசியல் லாபம் அடைய பார்க்கிறாரா? என்றும் மக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது. வெறும் இரண்டு எம்பி பதவிகளுக்காக ஒட்டு மொத்தமாக தலித் மக்களின் உரிமைகளை கூட்டணி கட்சியான திமுகவிடம் விட்டு கொடுத்து விட்டாரா? என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.