ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்! இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

0
240
Crowded train stations! Special trains running from today!

ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல்! இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கம்!

தீபாவளி பண்டிகைக்கு நாளை ஒருநாள் மட்டுமே இருப்பதால் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு திங்கட்கிழமை  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் வெளி ஊர்களில் பணிப்புரிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிர்கரித்துள்ளது.

அதனால் பெரும்பலான  மக்கள் அனைவரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பில் சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேஸ்வரத்திற்கு,தாம்பரத்தில் இருந்து திருநெல்வேலி மற்றும் திருச்சிக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன.

திருச்சியில் இருந்து இன்று மதியம் 2.15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் இரவு ஏழு மணிக்கு தாம்பரம் வந்தடையும்.மேலும் தாம்பரத்தில் இருந்து வருகிற 27ஆம் தேதி இரவு 9.40 மணியளவில் புறப்படும் சிறப்பு ரயில் இரவு மறுநாள் அதிகாலை 2.50 மணிக்கு திருச்சியை வந்தடையும்.தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை ஒன்பது மணிக்கு திருநெல்வேலி வந்தடையும்.

மேலும் திருநெல்வேலியில் இருந்து வருகிற வியாழக்கிழமை  மாலை 5.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை நான்கு மணியளவில் தாம்பரம் சென்றடையும்.மேலும் சென்னை  எம்.ஜி.ஆர் சென்ட்ரலில் இருந்து வருகிற ஆம் தேதி இரவு 8.45மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் நாளை காலை 11 மணிக்கு ராமேஸ்வரம் செல்லும்,அதன் பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து வருகிற 24ஆம் தேதி மாலை 4.20மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாற்று காலை 8 மணிக்கு தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.