நகை கடைகளில் அலைமோதும் கூட்டம்! தங்கத்தின் விலையில் சரிவு!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் மக்கள் ஏதேனும் ஒரு பொருளின் மீது முதலீடு செய்ய வேண்டும் என நினைத்து தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினார்கள். அதனால் இரண்டு ஆண்டுகளாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தையே சந்தித்து வந்தது.
கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினார்கள். அதனால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இருப்பினும் கடந்த பிப்ரவரி இரண்டாம் தேதி வரலாறு காணாத அளவிற்கு தங்கம் விலை உச்சம் பெற்றது. அதனை அடுத்து கடந்த வாரங்களில் ஏற்ற இறக்கத்துடனே காணப்பட்டு வந்தது.
மேலும் தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டுப் பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகமடைந்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். நேற்று ஒரு கிராம் தங்கம் 5165 க்கு ஒரு பவுன் ஆபரண தங்கம் 41,320-க்கும் விற்பனையானது.
ஆனால் இன்று 22 கேரட் தங்கம் ஒரு கிராம் 5155 ரூபாய்க்கும், ஆபரண தங்கம் ஒரு பவுன் 41,240க்கும் விற்பனையாகி வருகின்றது. அதுபோலவே 24 கேரட் தங்கம் விலை நேற்று ஒரு கிராம் 5632க்கு விற்பனையானது.ஒரு பவுன் 45,056க்கும் விற்கப்பட்டது. ஆனால் இன்று 24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.5625 க்கும் , ஒரு பவுன் ரூ 45,000 க்கும் விற்பனையாகி வருகின்றது. தங்கத்தின் விலை குறைந்ததால் நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதுகின்றது.