Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெற்ற மகளை பணத்திற்கு விற்ற கொடூர பெற்றோர்!! போலிஸ் விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்!! 

cruel-parents-who-sold-their-daughter-for-money-shocking-information-from-the-police-investigation

cruel-parents-who-sold-their-daughter-for-money-shocking-information-from-the-police-investigation

பெற்ற மகளை பணத்திற்கு விற்ற கொடூர பெற்றோர்!! போலிஸ் விசாரணையில் வந்த திடுக்கிடும் தகவல்!! 

பணத்தை வாங்கிக் கொண்டு 12 வயது மகளை 27 வயது நபருக்கு  பெற்றோர் விற்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலம் போபால் நகர் அருகே குணகா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் பெற்றோர் அவர்களது 12 வயது மகளை நபர் ஒருவருக்கு பணம் பெற்றுக்கொண்டு விற்பனை செய்வது என முடிவு செய்துள்ளனர். அந்த நபருக்கு 27 வயதாகிறது.

இருவருக்கும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு மஞ்சள் பூசும் நிகழ்வின் போது மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சித் துறையை சேர்ந்த அதிகாரிகள் போபால் கிராமப்புற காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களின் தகவலை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு கிரண்லதா கெர்கேட்டா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி உள்ளனர்.

தீவிர விசாரணையில் அந்த சிறுமிக்கு 12 வயது என்பதும் அவரை திருமணம் செய்ய இருந்த நபருக்கு 27 வயது என்பதும்  விசாரணையில் தெரியவந்தது. அந்த சிறுமியிடம் போலீசார் விசாரித்த போது அவர் ரூ.40,000 பணத்திற்கு அந்த நபரிடம் அவரது பெற்றோர் விலைபேசி விற்று விட்டனர். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்தபோது அவரது பெற்றோர் நிராகரித்துள்ளனர் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் முன்பணமாக ரூ.20,000 சிறுமியின் பெற்றோரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. திருமணம் முடிந்ததும் மீதமுள்ள 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பது என முடிவாகியுள்ளது.இதையடுத்து  குழந்தை திருமணத்திற்கு தூண்டுதல் மற்றும் மனித கடத்தல் ஆகியவற்றின் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியின் பெற்றோர் மணமகன் மற்றும் அவரின் பெற்றோர் என ஐந்து பெயரை கைது செய்துள்ளனர். மேலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Exit mobile version