Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மறுத்து பேசியதால் பெண்ணுக்கு சூடு வைத்த கொடுமை! தாய் மீது சிறுமி கொடுத்த புகார்!

Cruelty that heated up the woman for refusing to speak! The girl's complaint against the mother!

Cruelty that heated up the woman for refusing to speak! The girl's complaint against the mother!

மறுத்து பேசியதால் பெண்ணுக்கு சூடு வைத்த கொடுமை! தாய் மீது சிறுமி கொடுத்த புகார்!

முன்பெல்லாம் பத்து வயது வித்தியாசம் என்றால் கூட பையன் நல்லவனாக இருந்தால் போதும் என்பார்கள். ஆனால் தற்போது பெண் வீட்டில் 2 வயது வித்தியாசமே அதிகம் என கூறும் இந்த காலத்தில் இந்த சிறுமியின் தாயோ இப்படி ஒரு செயல் செய்தது வியப்பளிக்கிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் அருகே உள்ள கிராமத்தில் ஒரு பெண் அவரது 15 வயது மகளுக்கு பனப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த 40 வயது மதிக்க தக்க ஒருவருக்கு இரண்டாம் தாரமாக திருமணம் செய்ய முடிவு செய்துள்ளார்.

ஆனால் அந்த சிறுமியோ தனக்கு திருமணம் வேண்டாம் எனவும், மேற்படிப்பு படிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பெண் மகள் என்றும் பாராமல் கொடுமை செய்துள்ளார்.

மகளின் கழுத்து, கன்னம், தொடைகளில் சூடு வைத்தும், கை மற்றும் முதுகில் அடித்தும் காயப்படுத்தி வைத்துள்ளார். இதன் காரணமாக அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறி தன் அத்தை வீட்டிற்கு சென்று நடந்ததை கூறியுள்ளார்.

பின் அந்த அத்தை மூலம் அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டார். அதன் பின் அங்கிருந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் ஒன்றையும் தெரிவித்துள்ளார்.

அதில் தன் தாய் வாங்கிய 2 இலட்சம் கடனை பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த ஒருவர் அடைப்பதாக கூறியதால் தன் தாய் மகிழ்ந்து அதற்க்கு பதிலாக என்னை திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்துவதாகவும், முடியாது என கூறியதற்கு என்னை அடித்து, சூடு வைத்து கொடுமை படுத்துகிறார்.

மேலும் தந்தை இல்லாத தனக்கு தாயிடம் இருந்து உரிய பாதுகாப்பு தர வேண்டும் என்றும் கூறி அந்த புகார் மனுவை தந்துள்ளார். இது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகார் மனு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version