Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காக்கா முட்டை பட ஹீரோ பிரபல சின்னத்திரை நடிகை மீது காதலா? இன்ஸ்டாகிராம் மூலம் தூது!

பிரபல சின்னத்திரை நடிகை  ஷிவானி சமீபத்தில் தனது அழகை பார்த்து அனைவரும் மயங்கும் மற்றும் வியக்கும் வகையில் விதவிதமான வித்தியாசமான விதங்களில் தனது கவர்ச்சிப்  புகைப்படங்களை வலைதளங்களில் பதிவிட்டு கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ஷிவானியின் அழகிற்கும் நடிப்பிற்கும் பலர் ரசிகர்களாக உள்ளனர். அவர்களில் இப்படி ஒரு ஹீரோவும் இருக்கிறார், அதிலும் அவர் எவ்வளவு ரசிக்கிறார் என்பது அனைவரையும் வியக்க வைக்கிறது.  மேலும் தனது விருப்பமான ஹீரோயினி என்பவர் ஷிவானி என்று அவர் இன்ஸ்டாகிராமில் கூறியுள்ளார்.

தற்போது நிலவும் லாக்டோன் சூழ்நிலையில் பல நடிகர் நடிகைகள் தங்களது நேரங்களை பெரும்பாலும் வலைதளங்களில் LIVE வந்து தங்கள் ரசிகர்களுடன் நேரத்தை செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பது  அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

அப்போது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நடிகர்கள் மனம் திறந்து தங்களின் பதில்களை அனைவரும் படிக்கும் வகையில் பதிவிட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் காக்கா முட்டை பட ஹீரோ விக்னேஷிடம் எந்த ஹீரோயினுடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு ஷிவானி உடன் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

கவர்ச்சியான நடிகை யார் என்று நினைக்கிறீர்கள் எனும் கேள்விக்கும் ஷிவானி தான் என்று கூறியுள்ளார். மேலும் ஒரு முக்கியமான கேள்விக்கும் ஷிவானி தான் என்று கூறியுள்ளார்.அது என்னவென்றால் உங்களின் CRUSH யார் என்று கேட்ட கேள்விக்கு ஷிவானியே என்று பதிலளித்துள்ளார். இவர் கூறிய பதில்களின் மூலம் ஷிவானியை விரும்புகிறாரோ எனும் சந்தேகம் தோன்றுகிறதல்லவா?? 

மேலும் அவரின் விருப்பத்தை இன்ஸ்டாகிராம் வாயிலாக தெரிவிப்பது போல் இருக்கிறதல்லவா?? இன்ஸ்டாகிராம் மூலம் தூது அனுப்புகிறீர்களா என்று பலரும் இவரை கேலி செய்து வருகின்றனர்.

 

Exit mobile version