வெயிலுக்கு இதமாக உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி சர்பத்! எப்படி செய்வது என்று பாருங்க! 

0
196
Cucumber sorbet that cools the body in the sun! See how to do it!
வெயிலுக்கு இதமாக உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி சர்பத்! எப்படி செய்வது என்று பாருங்க!
வெயில் காலம் வந்துவிட்டாலே அனைவரும் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக் கூடிய உணவுகளை வாங்கி சாப்பிடுகின்றனர். தர்பூசணி, வெள்ளரிக்காய் போன்ற நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிட்டால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும். மேலும் உடல் சூடும் குறையும். அந்த வகையில் உடலுக்கு குளிர்ச்சி அளிக்கக் கூடிய வெள்ளரிக்காயை வைத்து சர்பத் எவ்வாறு செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
* வெள்ளரிக்காய்
* இஞ்சி
* கொத்தமல்லி
* கற்றாழை
* பெருங்காயம்
* உப்பு
* மோர்
செய்முறை:
முதலில் ஒரு மிக்சி ஜார் ஒன்றை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் வெள்ளரிக்காயை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதில் தோல் நீக்கிய இஞ்சியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதில் கற்றாழை ஜெல் சிறிதளவு சேர்த்துக் கொள்ளவும். பின்னர் கொத்தமல்லி இலைகளை இதில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இறுதியாக இதில் பெருங்காயம் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து கூழ் போல அரைத்துக் கொள்ள வேண்டும்.
இறுதியாக இதில் மோர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்னர் இதில் சிறிது வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதில் வேண்டும் என்றால் ஐஸ் கட்டிகளை சேர்த்துக் கொண்டு குடிக்கலாம். இதனால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருக்கும்.