கடலூர் மாவட்டச்செயலாளர் பதவிகளை வன்னியர்களுக்கே கொடுத்த EPS OPS! பாமகவுக்கு நெருக்கடி கொடுக்கவா?
கடலூர் மாவட்ட அதிமுக அமைப்பு ரீதியாக மூன்று மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது., ஏற்கனவே இரண்டு மாவட்டங்களாக அமைப்பு ரீதியாக கிழக்கு, மேற்கு என இருந்தன, தற்போது நிர்வாக வசதிக்காக கிழக்கு, மத்திய, மேற்கு என மூன்றாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் அவர்கள் மாவட்ட செயலாளராக இருந்து வருகிறார்,. மேற்கு மாவட்டத்திற்கு கடலூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அருள்மொழிதேவன் இருந்து வருகிறார்,. தற்போது அமைப்பு ரீதியாக புதியதாக கிழக்கு மாவட்டம் என்று உருவாக்கப்பட்டு சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் அவர்கள் அதிமுக சார்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*எம்.சி.சம்பத்தின் மத்திய மாவட்டத்திற்கு கடலூர்,குறிஞ்சிப்பாடி,நெய்வேலி மூன்று தொகுதிகள் உள்ளடக்கியது.
*அருண்மொழிதேவனின் மேற்கு மாவட்டத்திற்கு திட்டக்குடி(தனி), விருதாச்சலம்,காட்டுமன்னார்கோயில் (தனி) தொகுதிகளை உள்ளடக்கியது.
கே.ஏ.பாண்டியனின் கிழக்கு மாவட்டத்திற்கு சிதம்பரம்,புவனகிரி(தனி),பண்ருட்டி தொகுதிகளை உள்ளடக்கியது.
இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால் புதிதாக பிரித்து நியமிக்கப்பட்டுள்ள மூன்று மாவட்ட செயலாளர்களும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
கடலூர் மாவட்டத்தின் பெரும்பான்மையான சமுதாயமான வன்னியர்களை தான் செல்வி ஜெயலலிதா அவர்கள் முக்கியத்துவம் கொடுத்து முக்கிய பதவிகளை வழங்கி வந்தார்,. திமுக மாவட்ட செயலாளர் செல்வாக்கு மிக்கவராக வலம் வந்த எம்ஆர்கே பன்னீர்செல்வத்திற்கு ஜாதி ரீதியாக நெருக்கடி கொடுக்கவும், கடலூர் மாவட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சி பலம் மிக்கதாக இருப்பதால் வன்னியர்கள் மூலம் அக்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கவும், வன்னிய சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் இத்தகைய உத்திகளை ராஜதந்திரமாக செயல்படுத்தினார் ஜெயலலிதா,.
மேலும் பாமகவில் இருந்து வெளியேறிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்கள் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு சொல்லும்படியான ஒரு சில தொகுதிகளில் கணிசமான வாக்குகள் இருக்கின்றன,. இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு தான் ஜெயலலிதா பாணியில் எடப்பாடியும்,பன்னீர்செல்வமும் மூன்று மாவட்ட செயலாளர்களாக வன்னியர்களையே நியமித்துள்ளனர்.
திமுகவில் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்களை பலமிழக்க திமுகவினரே உள்ளடி வேலைகளை செய்வதால் திமுகவை அரசியல் ரீதியாக வன்னியர்களை வைத்து நிலைகுலைய செய்வதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரியவராக இருந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன் அவர்களுக்கும் அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது,. இவரும் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்தவர் தான்,. இவர் 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அப்போதைய பாமக வேட்பாளரும் தற்போதைய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அவர்களுக்கு சிம்மசொப்பனமாக நின்றார்,. இறுதியில் வெறும் 50க்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்,. மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கி 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக கடலூர் மாவட்ட செயலாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை வீழ்த்தி சட்டமன்ற உறுப்பினர் ஆனார்,. பிறகு மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டாலும் 2016 ஆம் ஆண்டு வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார், தற்போது அவருக்கு அதிமுகவின் மிக முக்கிய பொறுப்பான அமைப்புச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது,.
இவருடன் முன்னாள் அமைச்சர் தாமோதரன் அவர்களும் அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்,. மேலும் தேர்தல் பிரிவு இணைச்செயலாளர்களாக மதுரை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.கோபாலகிருஷ்ணன் மற்றும் முன்னாள் அமைச்சர் தாமோதிரன் நியமிக்கப்பட்டுள்ளனர்,.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் தங்களது பலத்தை 2020 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் மேலும் பல அதிரடி முடிவுகளை எதிர்பார்க்கலாம் என்று நடுநிலைவாதிகள் பேசி வருகின்றனர்.