Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாய்லர் வெடி விபத்து தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட சோகம்! தமிழக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கடலூர் சிப்காட் பகுதியில் இருக்கின்ற பூச்சிக்கொல்லி மருந்து தயார் செய்யும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை பாய்லர் வெடித்து தீ விபத்து உண்டானது இந்த பாய்லர் வெடித்த விபத்தில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்த இறக்கிறார்கள் காயமடைந்த பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரையில் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.

அங்கே இன்று காலையில் நூற்றுக்கும் அதிகமானோர் வேலை செய்வதற்காக புறப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு சென்ற சிலருக்கும் அங்கே இருந்த ரசாயன காரணமாக கை கால்களில் காயம் உண்டானதால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த விபத்திற்கு நிர்வாகத்தின் அலட்சியம் தான் காரணம் என இறந்து போனவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இந்தநிலையில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடலூர் கிரிம்சன் நிறுவன பாய்லர் வெடிவிபத்தில் உயிரிழந்த ராஜ்குமார், கணபதி சவிதா விஷேஸ் ராஜ் உள்ளிட்டோரின் குடும்பத்திற்கு 3 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும், காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்கப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார். அதோடு மேலும் பத்து நபர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

அதோடு இதுபோன்ற அலட்சியமாக செயல்படும் நிறுவனங்கள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது. அதோடு பாதிக்கப்பட்டவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version