தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்! வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவல்!

0
110

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் அதிக மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கும், அந்த விதத்தில் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் ஆரம்பித்து டிசம்பர் மாதம் வரையில் இருக்கும். நவம்பர் மாதத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் இயல்பை விடவும் அதிகமான மழை பதிவானது இதற்கு இடையில் இந்த மாத ஆரம்பத்தில் இருந்து மழை சற்று குறைய தொடங்கியது. பனியின் தாக்கம் பெரும்பாலான பகுதிகளில் அதிகமாக காணப்பட்டது.

இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் பல நாட்களுக்கு பிறகு ஒரு சில பகுதிகளில் கனமழை அறிவிப்பை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டிருக்கிறது. அதிலும் புத்தாண்டை ஒரு சில பகுதிகளில் நல்ல வரவேற்பு ஒரு சில பகுதிகளில் வரவேற்க இருக்கிறது என்றும், சொல்லப்படுகிறது.

அந்த விதத்தில், தமிழக கடற்கரையை ஒட்டி நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், ஆகிய இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை மற்ற கடலோர மாவட்டங்களில் அநேக பகுதிகளில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல புத்தாண்டு தினமான நாளைய தினம் விழுப்புரம், மயிலாடுதுறை, கடலூர் செங்கல்பட்டு, உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் கனமழையும், மற்ற கடலோர மாவட்டங்களில் அநேக பகுதிகளில் மிதமான ஆகிய மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

நாளை மறுநாள் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கக்கூடிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளிலும் மிதமான மழையும், பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரி கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதற்கான வாய்ப்பு இருக்கிறது, அதாவது மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 45 கிலோ மீட்டர் வரையிலான வேகத்தில் காற்று வீசும் என்ற காரணத்தால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு வருகின்ற 3ஆம் தேதி வரையில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டிருக்கிறது.