Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நோய் தீர்க்கும் சித்த மருத்துவம்!! பைல்ஸ் நோய் பாதிப்பிற்கு மருந்தாகும் நாயுருவி இலை!!

ஆசனவாய் பகுதியில் வரும் புண்களை மூலம் என்கின்றோம்.இந்த மூல நோயை நமது சித்த மருத்துவத்தை வைத்து எளிதாக குணப்படுத்திக் கொள்ளலாம்.

மூல நோயை குணப்படுத்தும் சித்த மருத்துவம்:

1)கடுக்காய் சூரணம் – ஒரு தேக்கரண்டி
2)வெல்லம் – ஒரு துண்டு
3)தண்ணீர் – ஒரு கிளாஸ்

ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி கடுக்காய் சூரணம் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இதை ஒரு கிளாஸிற்கு மாற்றி ஒரு துண்டு வெல்லம் சேர்த்து பருகி வந்தால் மூல நோய் குணமாகும்.

1)நாயுருவி இலை – ஐந்து
2)நல்லெண்ணெய் – சிறிதளவு

முதலில் நாயுருவி இலையை தண்ணீரில் போட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து கொட்டை பாக்கு அளவிற்கு உருட்டி நல்லெண்ணெயில் போட்டு ஊறவைத்து தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மூல நோய் குணமாகும்.

1)பிரண்டை கொழுந்து – சிறிதளவு
2)பசு நெய் – ஒரு தேக்கரண்டி

முதலில் பிரண்டை கொழுந்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து அடுப்பில் ஒரு தாளிப்பு கரண்டி வைத்து ஒரு தேக்கரண்டி நெய் சேர்த்து சூடுபடுத்துங்கள்.

பிறகு அதில் பிரண்டை துண்டுகளை போட்டு மிதமான தீயில் நன்கு வதக்கி எடுங்கள்.இந்த பிரண்டையை சாப்பிட்டு வந்தால் பைல்ஸ் புண்கள் ஆறும்.

1)துத்தி இலை – 10
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்

முதலில் துத்தி இலையை தண்ணீர் கொண்டு அலசி வைத்துக் கொள்ளுங்கள்.பிறகு இதை உரலில் போட்டு அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் இந்த துத்தி கீரை சாறில் தண்ணீர் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து பருகினால் மூல நோய் குணமாகும்.

1)சோற்றுக்கற்றாழை – ஒரு துண்டு
2)பால் – ஒரு கிளாஸ்
3)சர்க்கரை – ஒரு தேக்கரண்டி

ஒரு கூற்றுக்கற்றாழையை தோல் நீக்கிவிட்டு அதன் ஜெல்லை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.

அடுத்து அரைத்த கற்றாழை விழுதை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி ஒரு தேக்கரண்டி வெள்ளை சர்க்கரை சேர்த்து பருகி வந்தால் மூல நோய் நிரந்தரமாக குணமாகிவிடும்.

1)மருதம்பட்டை பொடி – ஒரு தேக்கரண்டி
2)பசும் பால் – ஒரு கிளாஸ்

பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பால் சேர்த்து குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு அதில் ஒரு தேக்கரண்டி மருதம்பட்டை பொடி சேர்த்து கொதிக்க வைத்து பருகி வந்தால் மூல நோய் புண்கள் ஆறும்.

Exit mobile version